Tuesday, January 23, 2018


'பெரியார்' .வெ.ராவைப் போல;


தமது அறிவுக்கு தவறென பட்டவுடன், மன்னிப்பு கேட்க துணிச்சல் வேண்டும்

ஆண்டாள் சர்ச்சை தொடர்பான வைரமுத்துவின் பேச்சின் ஒளிப்பதிவை 'யூடியுபில்' (Youtube) பார்த்த பின்;

திருக்குறள் 'அவை அறிதல்' அதிகாரத்தைப் படித்தேன்.

தகவல் பரிமாற்றத்தில் (communication) எவரையும் புண்படுத்தும் வாய்ப்பினை தவிர்க்கும் வழிமுறைகளை திருக்குறள் நன்கு விளக்கியுள்ளது.

எனது அறிவுக்கு எட்டியவரை, இழப்புகளைப் பற்றிய கவலையின்றி, நான் அவற்றை இயன்றவரை பின்பற்றி வாழ்கிறேன்; தமிழ்நாட்டில் குறிப்பாக தமிழ்த் துறையிலும், இசைத் துறையிலும் நிலவி வரும் விரும்பத்தகாத சார்பு சூழலையும் (Subjective Environment) கவனத்தில் கொண்டு.

மறைந்த தமிழ் இசை அறிஞர் வீ..கா சுந்தரம் அவர்கள், எனது 'தமிழ் இசையின் இயற்பியல்' (Physics of Tamil Music) முனைவர் பட்ட ஆய்வேட்டினை படித்த பின்;  

"அய்யா, நான் தங்களிடம் இசையில் இயற்பியல் (Physics of Music) பாடம் கற்க வேண்டும்' என்று தெரிவித்து, நான் வெட்கப்படும் வகையில் என்னை 'அதீதமாக' பாராட்டி மடல் எழுதினார்.  

அவர் தனது ஆய்வுமுடிவுகளில் ஒன்றாகிய;

இசையில் '' என்ற சுரத்திற்கு ''  இணை உறவில் உள்ளது, என்ற முடிவில் நம்பமுடியாத அளவுக்கு 'உடைமை உணர்வினை' (possessive) பேச்சிலும் எழுத்திலும் வெளிப்படுத்தினார்.

அந்த முடிவு தவறு என்று வெளிப்பட்ட எனது ஆய்வினை அவர் மறைந்த பின் தான் வெளியிட்டேன் (https://www.dropbox.com/s/50ipvkjjms3cni2/ATm-VeerapandianSA-iNai-kiLai-pagai-naTpu-tAnam-0048.pdf?dl=0   ); 

அவர் மனதினை அவர் வாழும் வரை புண்படுத்த விரும்பாததால்.

எனது முனைவர் பட்ட நெறியாளர் பேரா.முனைவர். .அங்கையற்கண்ணி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், ஆபிரகாம் பண்டிதர் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்த்த அழைத்த போதும் மறுத்து விட்டேன். அதற்கான காரணம் வருமாறு:

வீ.பா.கா சுந்தரத்தைப் போலவே, ஆபிரகாம் பண்டிதர், மேற்கத்திய இசையில் சில நூறு வருடங்களுக்கு முன் அறிமுகமான 'ஈக்வல் டெம்பெரமெண்ட்' (Equal Temperament) முறை தான், சிலப்பதிகாரம் குறிப்பிடும் வட்டப்பாலை முறை ஆகும்;

என்ற முடிவில் உறுதியாக இருந்தார். அது தவறு என்பது, எனது ஆய்வில் வெளிப்பட்டது. ( 'தமிழ் இசையியல் புதிய கண்டுபிடிப்புகள்'  அத்தியாயம் 12)

மேலே குறிப்பிட்ட அறக்கட்டளை சொற்பொழிவில், ஆபிரகாம் பண்டிதரின் வாரிசுகள் எல்லாம் பார்வையாளர்களாக பங்கேற்பதை நான் அறிவேன். எனது ஆய்வு முடிவானது அவர்களுக்கு அதிர்ச்சியைத் தரும், என்பதையும் நான் அறிவேன். எனவே அந்த சொற்பொழிவில் பங்கேற்பதைத் தவிர்த்தேன்.

ஆண்டாளை 'தேவதாசி' என்று குறிப்பிடும் ஆய்வு நூலானது எனது பார்வைக்கு வந்திருந்தால், முதலில் அதற்கான சான்று எவ்வளவு வலிவானது? என்று ஆராயாமல், அதனை நான் வெளிப்படுத்த மாட்டேன்; குறிப்பாக ஆண்டாளின் பக்தர்கள் நிரம்பிய அவையில்.

என்னையறியாமல் அந்த அவையில், அதை நான் வெளியிட்டு, பின் அதற்கான சான்றே இல்லை என்று தெரிந்த மறுகணமே;

அந்த பக்தர்கள் விரும்பும் ஆண்டாள் சந்நிதியில், பகிரங்கமாக மன்னிப்பு கேட்க தயங்க மாட்டேன். ஆண்டாள் சந்நிதியில் அவ்வாறு தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் மன்னிப்பு கோரியதும் சரியான செயலே ஆகும்; அதற்கு பின்னணியில் என்ன காரணங்கள் இருந்தாலும்

நான் கல்லூரி முதல்வராக இருந்து, கையில் பாட அட்டவணையுடன் சுற்றி வருகையில், ஒரு இளம் பெண் விரிவுரையாளர் வகுப்பு இருந்தும் செல்லவில்லை என்று வராண்டாவில் நின்றவாறே அவரைக் கண்டித்தேன். அவர் அந்த நேரத்தில் தனக்கு வகுப்பு இல்லை என்ற உறுதியாக சொன்ன‌தும், நான் மீண்டும் அட்டவணையை உற்று நோக்கி, நான் தவறுதலாக அவரைக் கண்டித்து விட்டதை உணர்ந்தேன். உடனே தாமதமின்றி, மற்ற விரிவுரையாளர்களும் பார்க்கிறார்கள் என்று அறிந்தும், அந்த விரிவுரையாளரிடம் நான் மன்னிப்பு கேட்டேன்; பார்த்த அனைவருக்கும் நம்ப முடியாத அதிர்ச்சியானது, அவர்களின் முகங்களில் வெளிப்பட்டது

அவர்களுக்கும் தமது தவறை உணர்ந்த மறுகணமே மன்னிப்பு கேட்கும் பண்பு வரும்; என்பதும் எனது எதிர்பார்ப்பாகும்.

புகழ் பெற்ற வெளிநாட்டு அறிஞர் ஒருவர் எனது ஆய்வு தொடர்பான மடலை தவறாக புரிந்து கொண்டு, அதனை மறுத்து மடல் எழுதினார். பின் நான் அனுப்பிய கூடுதல் சான்றுகளுடன் கூடிய விளக்கத்தை படித்தபின், தனது முந்தைய மடலுக்கு மன்னிப்பு கோரி, மடல் எழுதி, என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இன்று வரை அம்மடலை நான் வெளியிடவில்லை; அது எனக்கு தனிப்பட்ட முறையில் எழுதிய மடல் என்பதாலும், அதனை வெளியிட்டு என்னை உயர்த்திக் கொள்ள வேண்டும், என்ற தாழ்வு மனப்பான்மையில், நான் வாழவில்லை என்பதாலும்.

வைரமுத்து போன்ற பிரபலமானவர்கள் தமது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பதன் மூலம், இளம் கவிஞர்களுக்கு நல்ல முன்னுதாரணமாகும் வாய்ப்பும் அவருக்கு கிட்டும்.

தமிழ்நாட்டில் பிரபலமானவர்களில் பெரும்பாலோர் மோசமான முன்னுதாரணமாக வாழ்ந்து வருவதும், தமிழ்நாட்டின் சீரழிவிற்கான காரணங்களில் ஒன்றாகும்.

நானறிந்தது வரையில், தனது அறிவுக்கு தவறென பட்டவைகளை பகிரங்கமாக அறிவித்து திருத்திக் கொண்ட ஒரே தலைவர் .வெ.ரா அவர்கள் ஆவார்;

என்பதை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். ( http://tamilsdirection.blogspot.in/2017/09/blog-post_20.html  )

தமிழ்நாட்டில் பொதுஅரங்கில் நிகழ்கால தலைவர்களில் வைரமுத்துவால் உச்சமாக பாராட்டப்பட்ட தலைவராகியதி.மு. தலைவர் வெளிப்படுத்திய‌ 'தரம் தாழ்ந்த' சொற்களை எல்லாம் தொகுத்து, 'இதுதானா சார் உங்க தரம்' என்ற தலைப்பில் ' தமிழக அரசியல்' (24.01.2018; பக்கம் 40) வெளியிட்டுள்ளது.

வைரமுத்து சுட்டிக்காட்டிய கட்டுரை ஆசிரியரே, 'ஆண்டாள்' தொடர்பாக 'தேவதாசி' என்ற சொல்லுக்கு ஆதாரமே இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ள பின்னும் (http://www.dinamalar.com/news_detail.asp?id=1941251  );

ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்பு கோராமல்;

வைரமுத்து 'தான் செய்யாத தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதாக' தொடர்ந்து சாதித்தால்;

தி.மு.க தலைவரின் மேலே குறிப்பிட்ட களங்கம் போலவே;
வரலாற்றில் வைரமுத்துவின் அந்த தவறான நிலைப்பாடும் அழிக்க முடியாத களங்கமாகி விடும்.

வைரமுத்துவிடம் இருப்பது மொழித் திறமையே (language skills) தவிர, தமிழ்ப் புலமை அல்ல என்று வருங்காலத்தில் ஆய்வுகள் மூலம் வெளிப்பட்டாலும் கூட (http://tamilsdirection.blogspot.in/2018/01/httpwww.html  ) ; 

அதனால் அவருக்கு களங்கம் நேராது.

ஆண்டாள் தொடர்பான சர்ச்சையில் வைத்தியநாதனைப் போலவே, ஆண்டாள் சந்நிதியில் அவர் மன்னிப்பு கோருவதன் மூலம்;

இளம் கவிஞர்களுக்கு நல்ல முன்னுதாரணமாக வரலாற்றில் நிலையான புகழ் பெற முடியும். 



ஆண்டாள் சந்நிதியில் வைரமுத்து மன்னிப்பு கேட்க  வேண்டியதும்;

தனிப்பட்ட முறையில் இழிவு செய்ததற்காக, வைரமுத்துவிடம் எச்.ராஜா மன்னிப்பு கேட்க  வேண்டியதும்; 

சமுக நலன் நோக்கில் அவசியமாகும்.



சோடா பாட்டில் பேச்சுக்காக, "ஆண்டாள் நாச்சியாரின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்பு கோரினேன்" என்று ஜியர் சடகோப ராமானுஜர் விளக்கம் கொடுத்துள்ள செய்தியானது ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதன் மூலம் தமிழ்நாட்டிற்கு ஒரு நல்ல முன்மாதிரியாக (Role Model) அவர் வெளிப்பட்டுள்ளார்.

அதே போல வைரமுத்துவும் ஆண்டாள் சந்நிதியில் தாமதமின்றி மன்னிப்பு கேட்பது நல்லது; வரவாற்றில் வைரமுத்து ஒரு மோசமான முன்மாதிரியாக இடம் பெறுவதை தவிர்ப்பதற்காகவும் கூட.


தள்ளாத
வயதிலும், தமது கொள்கைக்கு எதிரானதென்றாலும், பொது நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்து பாடும் பொழுது எழுந்து நின்றவர் .வெ.ரா ஆவார்


ஆளுநர் கலந்து கொண்ட பொதுநிகழ்ச்சியில், மொழிக்கான வாழ்த்துப்பாடலை கடவுள் வாழ்த்தாகவும், நாட்டுக்கான வாழ்த்துப்பாடலை அவ்வாறு கருதாததாகவும் சங்கரமடம் கொடுத்துள்ள விளக்கமானது, நாட்டுக்கான வாழ்த்துப்பாடலையும் அவமதித்தாகாதா? பொது ஒழுக்க நெறிகளை கடைபிடிப்பதானது தமது ச்சாரத்திற்கு விரோதமென்றால், பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்ப்பது தானே சரியாகும்



'தமிழ்நாட்டில் ஒரு நிகழ்ச்சி (programme) இப்படி நடந்தால், பின் விளைவுகள் இப்படித்தான் இருக்கும்' என்பதும் எளிதில் யூகிக்கக் கூடியதே ஆகும். எனவே சங்கரமடமும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், சமயோசிதமின்றி செயல்பட்டு, விரும்பத்தகாத விளைவுகளுக்கு காரணமாகி விட்டார்கள்; என்பதும் எனது கருத்தாகும்



தனிப்பட்ட ஆச்சார நெறிகள் எல்லாம், பொது ஒழுக்க நெறிகளுக்கு முரண்படுமானல், பொது நிகழ்ச்சிகளில் அவை வெளிப்படுவதை தவிர்ப்பதே, பொது ஒழுங்குக்கும், அமைதிக்கும் உகந்ததாகும். மாறாக அந்த முரண்பாட்டை நியாயப்படுத்துவதானது, பொது ஒழுக்கநெறிகளை பலகீனமாக்கி, சமூக சீரழிவை வேகப்படுத்தும் அபாயம் உண்டு.




வன்முறைகள் வெடிக்கும் போது, 'பதவிக்காரர்கள், பணக்காரர்கள், படித்தவர்கள், பிராமணர்கள்' பாதிக்கப்படுவதை விட, அப்பாவி பொது மக்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள்;


என்பதை சுட்டிக்காட்டி, வன்முறைக்கு இடமளிக்காமலும், பொது மக்களுக்கும், பொதுச்சொத்துக்களுக்கும் சேதமின்றியும், போராட்டங்கள் நடத்தி, கைதாகும் போது போலீசாருடன் சண்டை போடாமல் கைதாகி, எதிர்வழக்காடாமல் நீதிமன்றம் விதிக்கும் தண்டனையை ஏற்று பயணித்த ஒரே தலைவரான ' பெரியார்'  .வெ.ராவும்;



சாகும் வரை எந்த வாகனத்திலும் பயணிக்காமல், நடந்தே இந்தியா முழுவதும் சுற்றி வந்து, எளிமையின் இலக்கணமாக வாழ்ந்து, தமது ஆச்சாரநெறிகளை, எந்த கட்டத்திலும், பொது ஒழுக்க நெறிகளுடன் மோதும் வாய்ப்பிற்கு இடமளிக்காமல், 'கடுமையாக' கடைபிடித்து, கணபதி ஸ்தபதி போன்ற பிராமணரல்லாத புலமையாளர்களை எல்லாம் விளம்பரமின்றி ஊக்குவித்து வாழ்ந்த‌ 'மகா பெரியவர்' சந்திரசேகரரும்;


வாழ்ந்தது வரையில், இது போன்ற சர்ச்சைகளையும், போராட்டங்களையும் காஞ்சி சங்கரமடம் சந்தித்ததில்லை.

சமூக
மோதல் அழுத்தங்களிலிருந்து (Social Tensions) விடுபட்டு, தமிழ்நாடு ஆக்கபூர்வமான திசையில் பயணிக்க வேண்டுமானால், விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளையும், பேச்சுக்களையும், சமுகத்தில் மேல் மட்டத்தில் உள்ளவர்கள் தவிர்த்து;



உணர்ச்சிபூர்வ இரைச்சலற்ற அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவிக்க வேண்டும்.

ஆண்டாள் சர்ச்சையில், இந்துத்வா எதிர்ப்பு முகாம்களில் அறிவுபூர்வ விவாத வலிமை குறைந்திருப்பதானது;



வெட்ட வெளிச்சமாகி வருகிறது, என்பதும் எனது கருத்தாகும்.



அதே நேரத்தில் ஆண்டாள் சர்ச்சையில் பலகீன நிலையில் இருந்த 'இந்துத்வா எதிர்ப்பு' கட்சிகளுக்கு, புத்துயிர் கொடுத்துள்ள 'தமிழ்த்தாய் வாழ்த்து' சர்ச்சையின் வீச்சிற்கும், ஆண்டாள் சர்ச்சையின் வீச்சிற்கும் இடையில் தொடங்கியுள்ள போட்டியானது;


விரைவில் சுமுகமான முடிவை எட்டவில்லையென்றால், அது மோசமான விளைவுகளில் முடியும் அபாயமும் இருக்கிறது.


விஜயேந்திரர் செய்த தவறையே, கோவை செம்மொழி மாநாட்டில், அன்றைய முதல்வர் கருணாநிதியும் செய்திருந்தார்;


என்பது உண்மையானால், அதை அன்று கண்டிக்காமல், இன்று விஜயேந்திரரை கண்டிப்பது சரியா?


என்ற விளக்கத்தை, இன்று கண்டிப்பவர்கள் தந்தாக வேண்டும். 

ஆண்டாள் சர்ச்சையில், இந்துத்வா எதிர்ப்பு முகாமில், வைரமுத்துவின் தவறினை நியாயப்படுத்தும் போக்கும்;


தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையில், இந்துத்வா ஆதரவு முகாமில், விஜயேந்திரரின் தவறினை நியாயப்படுத்தும் போக்கும்;


வேண்டியவர், வேண்டாதவர் அடிப்படையிலான பாரபட்ச போக்கில், ஒன்றான போக்காகும்.


திருக்குறள் (4)இன் படி



வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல‌’
 
எதிரெதிர் முகாம்களில் பாரபட்ச தவறு புரிபவர்கள் எல்லாம், இயற்கையின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது; மடாதிபதிகளாக இருந்தாலும், சாதாரண மனிதர்களாக இருந்தாலும்


ஆண்டாள் சர்ச்சையில் முன்னுக்கு நிற்பவர்களில் கணிசமானோர், தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையிலும் பாரபட்சமற்ற அணுகுமுறையை மேற்கொள்ளாவிடில்;


அடங்கிவரும் பிராமணர் - பிராமணரல்லாதோர் பகைமையானது ஊக்கம் பெற்று, தேசியக்கட்சிகள் இன்னும் பலகீனமாகும் விளைவில் முடிந்தால் வியப்பில்லை.


மீடியாக்களில் உணர்ச்சிபூர்வ புழுதியைக் கிளப்பி வலம் வரும் ஆண்டாள் சர்ச்சையும், தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையும், மீடியா செல்வாக்கிற்கு உட்பட்ட 'சுமார் 50 வயத்துக்கும் அதிகமான ஓரளவு வசதியானவர்கள் மத்தியில் தான் பேசப்படுகிறது.


கல்லூரி மாணவர்கள், கிராம, நடுத்தர ஏழை மக்களில் பெரும்பாலோரின் மத்தியில் நடைபெறும் உரையாடல்களில் அவை இடம் பெறவில்லை. அவர்களின் குவியத்தில் இப்போது உள்ளது பெருந்து கட்டண உயர்வு மட்டுமே. கூடுதலாக அந்தந்த பிரிவினரைப் பொறுத்து, விலைவாசி உயர்வு, வேலை தேடும் முயற்சி, ஆதார் அலைச்சல், குடிநீர், சாலை பிரச்சினைகள் போன்றவையே அவர்களின் உரையாடல்களில் அதிகம் இடம் பெறுகின்றன.



மேலே குறிப்பிட்ட பாரபட்ச அணுகுமுறையில் வாழ்பவர்களை எல்லாம் அவர்கள் மதிக்காதது மட்டுமல்ல; தமதளவில் பாரபட்சமின்றி வாழ்பவர்களை பெரிதும் மதிக்கிறார்கள். தம‌து அறிவுக்கு தவறென பட்டவுடன், மன்னிப்பு கேட்க துணிச்சலும், ஒப்பீட்டளவில், அவர்களிடம் அதிகமாக வெளிப்பட்டு வருகிறது.



எனவே ஆண்டாள் சர்ச்சையும், தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையும், நிச்சயமாக தமிழ்நாட்டின் தேர்தலையோ, வருங்காலத்தையோ தீர்மானிக்கப் போவதில்லை.


எனவே அந்த இரண்டு சர்ச்சைகளையும், சுயலாப அரசியல் நோக்கில் ஊதிப் பெருக்க வைத்து, 'தேர்தல் அரசியல் லாபம்' பெற முயலும் கட்சிகள் எல்லாம் ஏமாறப் போவதும் நிச்சயமே.

ஏற்கனவே முந்தைய பதிவில் விளக்கியபடி, தமிழ்நாட்டில் ஊழல் ஒழிப்பானது கேலிக்கூத்தாக தொடர்ந்து, செயல்பூர்வமாக மேற்குறிப்பிட்ட மக்கள் மத்தியில் நம்பிக்கை பெறும் கட்சியானது வெளிப்படும் வரையில்;



ஆர்.கே.நகர் பாணியில் 'பணத்துவாவே' தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும்; தேசியக் கட்சிகள் தனித்து நின்றால், நோட்டாவுடன் தான் போட்டி போடும் நிலை வரும்.

No comments:

Post a Comment