Monday, January 22, 2018


ஆண்டாள் சர்ச்சையில் வெளிப்பட்டது:

வைரமுத்துவிடம் இருப்பது மொழித் திறமையா? அல்லது தமிழ்ப்புலமையா?


'தேவதாசி' ஒழிப்பு சட்டம் தொடர்பாக முத்துலட்சுமி ரெட்டி தமிழக சட்டசபையில் முன் வைத்த வாதங்கள் அடிப்படையிலும்;

வைரமுத்து சுட்டிக்காட்டிய கட்டுரை ஆசிரியரே, 'ஆண்டாள்' தொடர்பாக 'தேவதாசி' என்ற சொல்லுக்கு ஆதாரமே இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ள பின்னும் (http://www.dinamalar.com/news_detail.asp?id=1941251  );

அதை உறுதிப்படுத்தாமல் தான் அந்த சொல்லைப் பயன்படுத்தியது தவறு என்று அறிவுநேர்மையுடன் வைரமுத்து ஒத்துக் கொள்ளாததையும்;

'கழகம்' என்ற சொல்லானது 'சூதாடுமிடம்' என்று திருக்குறளில்(937) வருவதன் அடிப்படையில், இன்று அதே பொருளில் 'திராவிட' கட்சிகளின் பெயரில் வரும் கழகத்தை குறிப்பிடமுடியுமா? என்ற கேள்வியையும்;

வைரமுத்து 'தான் செய்யாத தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதாக';

முன்வைத்துள்ள விளக்கமானது அறிவுநேர்மையாகுமா? என்ற கேள்வியையும்;

பின் தள்ள, எச்.ராஜா போன்றவர்கள் எழுப்பியுள்ள‌ உணர்ச்சிபூர்வ இரைச்சல்கள் உதவ அனுமதிக்க கூடாது.

தமிழில் 'சாதி' என்ற சொல்லின் பொருளானது, காலனிய சூழ்ச்சியில் திரிந்தது தெரியாமலும்;( http://tamilsdirection.blogspot.in/2016/01/   )

'நிலவுடமை' என்ற கருத்தும் மேற்கத்திய இறக்குமதி என்பதும், அது ஆண்டாள் வாழ்ந்த தமிழகத்துக்கு பொருந்தாது என்பது தெரியாமலும்; 

மேற்கத்திய குறிப்பாய (western paradigm)  'பெண் உரிமை'யின் வரை எல்லைகள் (limitations)  புரியாமலும்;( ; http://tamilsdirection.blogspot.in/2016/07/normal-0-false-false-false-en-in-x-none.html  ) 

வைரமுத்து வெளிப்படுத்தியுள்ள விளக்கமும் விவாதத்திற்கு உரியதாகும். 

தமது மொழித் திறமையின் (language skills) மூலம்,  தாம் புரிந்த தவறுகளிலிருந்து தப்பிக்க, ஒரு வகை 'கவர்ச்சிகர மொழி' நடையை, பிரபலமானவர்கள் கையாளும் போது, அவர்களுடன், அவர்கள் கையாண்ட மொழி நடையும் மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் கேலிப் பொருள் ஆகிவிடும் அபாயமும் தமிழ்நாட்டில் அரங்கேறி வருகிறது. ( http://tamilsdirection.blogspot.in/2015/06/  ) 

வைரமுத்து 'தான் செய்யாத தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதாக' வெளிப்படுத்தியுள்ள கட்டுரை மற்றும் தொலைக்காட்சி விளக்கம் அடிப்படையில்; 

தமிழில் அவருக்கு இருந்த திறமைகளையெல்லாம் (Tamil Language Skills) பயன்படுத்தியிருந்தாலும்; 

வைரமுத்துவிடம் இருப்பது மொழித் திறமையா? அல்லது தமிழ்ப்புலமையா?

என்ற ஆராய்ச்சிக்கு அவரின் படைப்புகள் அனைத்தையும் உட்படுத்த வேண்டிய நெருக்கடியையும், அந்த விளக்கங்கள் ஏற்படுத்தி உள்ளன. 

அவரை ஆதரித்து முன்வைக்கப்பட்டுள்ள விவாதங்கள் எல்லாம்; 

தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் வளர்ச்சிப் போக்கில், பொது அரங்கில் ஆதிக்கம் செலுத்தி, ஆனால் இது வரை அடையாளம் கண்டு அகற்றப்படாத;( http://tamilsdirection.blogspot.in/2015/10/ & http://tamilsdirection.blogspot.in/2016/04/normal-0-false-false-false-en-in-x-none_22.html  ) 

தர்க்கவிரோத (illogical)  குறைப்பாடுகள் எல்லாம், 'ஆண்டாள்' கருணையால் அறிவுபூர்வ குவியத்திற்குள்ளாகி, அந்த குறைபாடுகளில் இருந்து, தமிழ்நாடு விடுதலை பெறும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் பொதுஅரங்கில் நிகழ்கால தலைவர்களில் வைரமுத்துவால் உச்சமாக பாராட்டப்பட்ட தலைவராகியதி.மு. தலைவர் வெளிப்படுத்திய‌ 'தரம் தாழ்ந்த' சொற்களை எல்லாம் தொகுத்து, 'இதுதானா சார் உங்க தரம்' என்ற தலைப்பில் ' தமிழக அரசியல்' (24.01.2018; பக்கம் 40) வெளியிட்டுள்ளது.

மொழியில் திறமை (language skills) என்பதற்கும் புலமை (scholar) என்பதற்கும் உள்ள வேறுபாட்டினை விளங்கிக் கொள்ள, இசை தொடர்பான விளக்கம் துணை புரியும். 

அது மட்டுமல்ல, 'கவிஞர்' என்ற அடிப்படையில், திரைப்படங்களில் சுருதி சுத்தமில்லாத பாடல்களை எழுதும் போக்கை, முதன் முதல் அறிமுகப்படுத்தியவர் வைரமுத்துவா? என்பது தொடர்பான எனது ஆய்வினையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். ( http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_40.html) 

ஒரு இசை அமைப்பாளர் தமக்குள்ள இசைத்திறமை (Music Skills) மற்றும் இசை ரசனை என்ற இரண்டு 'துடுப்புகளின்' துணையுடன், தமது பார்வைக்கு வரும் இசைகளை மூலங்களாகக் கொண்டு வெளியில் தெரிந்தும் தெரியாமலும் 'காப்பி' அடித்து, 'ஹிட்' பாடல்களையும் தரமுடியும். 1970களில் 'மாடர்ன் தியேட்டர்ஸ்' தயாரித்த படங்களில், வெளியில் தெரிந்து, பிரபலமான இந்தி திரைப்படப் பாடல்ளை, அப்படியே தமிழிலும் 'ஹிட்டாக' இசையமைத்தவர் வேதா(பெயர் எனது நினைவின்படி). 

இன்று நாம் ரசிக்கும் பாடல்களில் வெளியில் தெரியாமல், தம்மிடமுள்ள தமக்குள்ள இசைத்திறமை (Music Skills) மற்றும் இசை ரசனை மூலம்  'காப்பியடித்து' வெளிவந்த பாடல்களின் உண்மையான மூலங்களும் (sources) இணையத்தில் வெளிவரத் தொடங்கியுள்ளன. ஆராய்ச்சி கட்டுரைகளில் 'திருடி' எழுதியவைகளை கண்டுபிடிக்கும் மென்பொருள் (Software) பயன்படுத்தப்படுகிறது. அது போல இசையிலும் 'திருட்டை' கண்டுபிடிக்கும் மென்பொருளை என்னால் உருவாக்க முடியும்; தரமிக்க அமைப்புகள் அந்த ஆய்வுத் திட்டத்திற்கு நிதி உதவி வழங்கினால். 

தம்மிடமுள்ள தமக்குள்ள இசைத்திறமை (Music Skills) மற்றும் இசை ரசனை மட்டுமின்றி, இசையில் புலமையும் உடையவர்களின் படைப்புத் திறனைப்
(Creativity) திறமையைப் பொறுத்து, உலக அளவில் சாதனையான இசைகள் (Compositions) வெளிவந்துள்ளன; மேலே குறிப்பிட்ட இசைத் திருடர்களுக்கும் மூலங்களாக (Sources) பயன்படும் வகையிலும். 

இசையைப் போலவே, ஒரு மொழியிலும் தமக்குள்ள மொழித் திறமைகள் மூலம் ஒருவர் பேச்சாளராகவும், எழுத்தாளராகவும், கவிஞராகவும், தமக்குள்ள 'சந்தைப்படுத்தல் திறமையைப் (Marketing Skill)  பொறுத்து, வெற்றிகரமாக வலம் வர முடியும். 

அவ்வாறு வலம் வரும் நபருக்கு அந்த மொழியில் புலமை இருக்கிறதா? இல்லையா? என்ற ஆராய்ச்சியானது, பொது அரங்கில் அதற்கான நெருக்கடி வரும்போதே வெளிப்படும்; அந்த சமூகத்தில் புலமையும், புலமையாளர்களும் பொதுவாழ்வு வியாபாரிகளின் செல்வாக்கில் உள்ள மீடியாவின் வெளிச்சத்திற்கு வராமல், இருட்டில் முடங்கிக் கிடக்கும் சூழலில்           
( http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_14.html ) 

வைரமுத்து 'தான் செய்யாத தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதாக' விளக்கங்களில், 'சாதி' என்ற தமிழ்ச் சொல்லை, பயன்படுத்தி உள்ளார். 

ஆண்டாள் வாழ்ந்த காலக்கட்டத்தில், 'சாதி' என்ற தமிழ்ச் சொல்லிற்கு இன்றுள்ள பொருள் இல்லை; ( ;( http://tamilsdirection.blogspot.in/2016/01/  ) 

என்று தெரியாமல், காலனிய சூழ்ச்சியில், 'பொருள் திரிபுக்குள்ளாகி' (Semantic Distortion), வைரமுத்து பயன்படுத்தியுள்ள பொருளில், தமிழில் இருந்த 'சாதி' என்ற சொல்லானது, பொருள் திரிபுக்கு உள்ளானது; 

என்ற புலமை வைரமுத்துவுக்கு இல்லை;


என்பதற்கு அவரின் மேலே குறிப்பிட்ட விளக்கமே சான்றாகிறது.

ஆண்டாள் தொடர்பாக வைரமுத்துவின் புலமைக்குறைப்பாட்டினை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது கீழ்வரும் கட்டுரை:
http://dhinasari.com/general-articles/23941-tips-to-vairamuthu-how-to-do-thesis-studies-in-andal-poems.html
அது போலவே, இந்திய சமூகத்தை 'நிலவுடைமை  உறபத்தி முறை' (Feudal Mode of Production) சமூகமா? அல்லது 'ஆசிய சமூக உற்பத்திமுறை ( Asiatic Mode of Production) சமூகமா?' என்று காரல் மார்க்ஸே அடையாளம் காண முடியாமல் குழம்பியது தெரியாமலும்; 

ஆண்டாள் வாழ்ந்த காலத்தில் தமிழ்நாட்டில் நிலவுடமை சமூகம் இருந்ததாக கருதி, வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார். 

தமது விளக்கத்தில் உள்ள அபத்தம் பற்றி, வைரமுத்து தெளிவு பெற விரும்பினால்; 

பேரா.அருணன் எழுதி 'திராவிட இயக்கம் ஒரு மார்க்சிய ஆய்வு' என்ற நூலுக்கு; 

பேரா.வெற்றிமணி என்ற எனது புனைப்பெயரில், 'விடுதலை', 'உண்மை' இதழ்களில் மறுப்பு வெளிவந்து, பின் 'பெரியாரியலா? மார்க்சியமா?' என்ற தலைப்பில், ( என்னிடம் அனுமதி கூட பெறாமல் வெளியிடும் 'நாகரீகம்'(?) உள்ள 'பெரியார்' ஆதரவாளர்கள் மூலம்) தற்போது வெளிவந்து விற்பனையில் உள்ள  நூலை படிக்குமாறு ரிந்துரைக்கின்றேன்.

உலக மொழிகளிலேயே இன்று தமிழுக்கு மட்டுமே, மொழி தொடர்பான திறமைக்கும் (Language Skills), புலமைக்கும் (Scholarship) இடையிலான வேறுபாடு மறைந்து, சந்தைப்படுத்தலில் (Marketing),  'அதீத' வெற்றி பெற்ற, மொழி திறமையாளர்கள் (language skilled persons ) எல்லாம் புலமையாளர்களாக (scholars) வலம் வரும் அவலம் நேர்ந்துள்ளதா? 

என்ற விவாதம் தொடங்க வேண்டிய நேரமும் வந்து விட்டது; ஆண்டாளின் கருணையால். 

உணர்ச்சிபூர்வ இரைச்சலுக்கு இடமளிக்காத மேற்குறிப்பிட்டவிவாதத்தில், 'தமிழ் இலக்கணத்தில் தமக்கு ஆழ்ந்த புலமையில்லை' என்பதை வெளிப்படுத்தியுள்ள அண்ணாவின் பங்களிப்பும், இடம் பெற வேண்டிய நேரமும் வந்து விட்டது.( http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_5.html )


தமிழில் மொழி தொடர்பான திறமைக்கும் (Language Skills), புலமைக்கும் (Scholarship) இடையிலான வேறுபாடு மறைந்ததற்கு காரணமான சமூக செயல்நுட்பம் பற்றிய ஆய்வினை மேற்கொண்டால்;


தமிழர்களில் தரகு/ரவுடி திறமைகளில் 'புலமை'(?) மிக்கோரின் ஆதிக்கத்தில் தமிழ்நாடு சிக்கி சீரழிய, 'அந்த புலமையாளர்களை'  துதிபாடி பிழைக்கும் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் கும்பல் வளர்ந்த போக்கில், தமிழில் புலமை சீரழியவும், 'அதே சமூக செயல்நுட்பம்' காரணமாகி விட்டது;



என்ற முடிவும் வெளிப்பட்டால் வியப்பில்லை. 'அந்த சமூக செயல்நுட்பம்' பற்றிய புரிதலின்றி, 'குருட்டுத்தனமான இந்துத்வா எதிர்ப்பு போதையில்' தெரிந்தும், தெரியாமலும் 'அந்த புலமையாளர்களை' ஆதரித்தஅறிவுஜீவிகள் எல்லாம்



'ஆண்டாள் சர்ச்சையில், என்ன நிலைப்பாடு எடுப்பது?' என்று விழி பிதுங்கி மெளனப் போக்கினை கடைபிடித்தால்;

'அந்த மெளனப் போக்கே', அவர்களின் பொதுவாழ்வு மரணத்திற்கு இட்டுச் சென்றால் வியப்பில்லை: ஆண்டாளின் கருணையால்.

திருக்குறளை (423) ஓரங்கட்டி;
'எப்பொருள் எவர்வாய் என்றாய்ந்து அவர்பால்
 வெறுப்பை உமிழும் இழிவு' என்ற புதுக்குறள் வழியில்;

பயணிக்கும் 'குருட்டுத்தனமான இந்துத்வா எதிர்ப்பானது', வைரமுத்துவின் பங்களிப்பால், ஆண்டாள் சர்ச்சையின் மூலம் அருங்காட்சியகத்திற்கு சென்றால், அது தமிழ்நாட்டிற்கு நல்லதாகவே முடியும்; 'சமூகத் தூண்டல்' (Social Induction)  மூலம் அந்நோய்க்குள்ளான இந்துத்வா ஆதரவாளர்களையும் குணப்படுத்தி.

'வைரமுத்துவிடம் இருப்பது மொழித் திறமையா? அல்லது தமிழ்ப்புலமையா?

என்ற தலைப்பில், ஆர்வமும் உரிய உழைப்பும், உள்ளார்ந்த ஈடுபாடும் (Passion) உள்ள எவரும், 

இந்தியாவில் தரம் மிக்க பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட விடும்பினால்;

'ஆண்டாளின் கருணைக்கு' நன்றி தெரிவித்து, அந்த ஆராய்ச்சிக்கு என்னால் இயன்ற உதவிகளை புரிய இயலும்.

No comments:

Post a Comment