Monday, January 29, 2018


வைரமுத்துவின் பங்களிப்பால், 'ஆண்டாள் சர்ச்சை'யின் மூலமாக;



'திராவிட' பிம்பங்களும், அதன் மூலம் தமிழின் வளர்ச்சிக்கான தடைகளும் உடைகின்றனவா?


ஆண்டாள் தொடர்பான சர்ச்சையில் வெளிப்படும் அறிவுபூர்வ விவாதங்கள் எல்லாம் மிகுந்த நம்பிக்கை தருகின்றன; தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சி நோக்கில்.

'கவர்ச்சிகர மொழித் திறமைகள்' (Attractive Language Skills) துணையுடன், புலமையாளர்களை ஓரங்கட்டி, வழிபாட்டுப் புழுதிப் புயலை ஊக்குவித்து, சந்தைப்படுத்தும் திறனுள்ள தமிழ் வியாபாரிகள் எல்லாம்;

திராவிட இயக்கம் வளர்ந்த போக்கின் துணை விளைவுகளாக (Byproducts) வளர்ந்துள்ளார்கள்.

அவ்வாறு தமிழிலும், பாடலுக்கான யாப்பிலும், புலமையின்றி, தமது மொழித்திறமைகளுடன் (Language Skills), சந்தைப்படுத்தும் திறனில் மிகுந்த தேர்ச்சியுடனும் முன்னணியில் வைரமுத்து பயணிக்கிறாரா?

என்ற ஐயமானது வெளிப்பட்டது; 

அவரது திரைப்பட பாடல்களை, எனது இசை ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் ஆய்வுக்கு உட்படுத்தியபோது. 
(http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_40.html

'புதுக்கவிதை' என்ற பேரில் யாப்பறிந்தோரின் 'மணிகளும்', 'யாப்பறியா புழுதிகளும்' வேறுபாடின்றி, வளர்ந்த போக்கில்;

புலமையிலிருந்து உள்மறை(Latent) விவாகரத்துடன், வெறும் மொழித்திறமைகளுடனும் (Language Skills), 'அதீத' சந்தைப்படுத்தும் திறமைகளுடனும்(Marketing Skills), வைரமுத்து 'திரைப்படக் கவிஞராக' வளர்ந்த போக்கில்;


உற்றுக் கேட்டாலும் சொற்கள் விளங்காத பாடல்கள் திரைப்படங்களில் வளர்ந்ததா? என்ற ஆய்வுக்கான முன் தடய சான்றுகளை(Prima Face Evidences) மேலே குறிப்பிட்ட பதிவில் விளக்கியுள்ளேன். 
 


ஆண்டாள்
தொடர்பான சர்ச்சையில், அந்த ஐயத்திற்கான வெளிச்சம் வெளிவரத் தொடங்கியதானது, என்னை வியப்பில் ஆழ்த்தியது. 

(http://tamilsdirection.blogspot.com/2018/01/httpwww.html  )

காலனி சூழ்ச்சியில், 'இனம்' மற்றும் ' சாதி' என்ற இரண்டு சொற்களும் பொருள் திரிபுக்குள்ளாகி (Semantic Distortion), உணர்ச்சிபூர்வ வெறுப்பு அரசியலில்
(http://tamilsdirection.blogspot.com/2016/01)

எவ்வாறு 'திராவிட பிம்பங்கள்' உருவாகின? என்பது தொடர்பான ச‌மூக செயல்நுட்பமும், வைரமுத்துவின் மூலமாக வெட்ட வெளிச்சமாகி வருகிறது.



தாம் மேற்கோள் காட்டும் கருத்திற்கான சான்றுகள் எல்லாம், எந்த அளவுக்கு நம்பத்தகுந்தவை? என்று ஆராயாமல், பொது அரங்கில் 'அவையும் அறியாமல்', மேற்கோள் காட்டி, 'மாட்டிக் கொள்வதும்';


தமது தவறால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோராமல், தவறினையும் ஒப்புக் கொள்ளாமல் பயணிப்பதும்;



புலமையிலிருந்து துண்டிக்கப்பட்ட மொழித் திறமைகளுடன் பயணிப்பவர்களிடம் வெளிப்பட்டு, அத்தகையோரை அடையாளம் காட்டும் சிக்னலாகும். அத்தகையோர் எல்லாம் சமூகத்தில் செல்வாக்குடன் வலம் வருவதும், அந்த சமூகத்தின் சீரழிவின் சிக்னலாகும்.


மொழியில் திறமைகள் (Language Skills) என்பதானது, புலமையிலிருந்து துண்டிக்கப்படும் படலமானது;

நானறிந்தது வரையில், உலக வரலாற்றிலேயே முதல் முறையாக;
1944இலிருந்து தொடங்கியது:

என்பது தொடர்பாக, கடந்த சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக நான் முன்வைத்து வரும், சான்றுகள் அடிப்படையிலான வாதங்களை எல்லாம், 'மீடியா இருட்டில்' தள்ளி, புறக்கணித்து;

திராவிட அரசியல் ஊழல் கொள்ளைக் குடும்பங்களுக்கு 'வெண் சாமரம்'  வீசி, ஆதரித்து வந்த பெரியார் கட்சித் தலைவர்களுக்கும், ' திராவிட' அரசியல் தலைவர்களுக்கும் சவாலாக‌;

வரலாற்றின் சுயநினைவற்ற கருவியோ? என்று நான் வியக்கும் வகையில்;

'ஆண்டாள் சர்ச்சை'யின் மூலம், வைரமுத்துவின்மொழித்திறமைகள்’ (Language Skills) மூலம் உருவான எழுத்துக்கள் எல்லாம்;

'புலமை வறட்சியில்' இருந்ததானது, ' திராவிட இருட்டிலிருந்து' வெளிப்பட்டு;
அதன் மூலம், 'திராவிட' காற்றில் பூதாகரமாக வளர்ந்து வந்த வைரமுத்துவின் 'பிம்ப பலூன்' அம்பலமாகி;

அந்த 'ஆண்டாள் சர்ச்சை' என்ற ஊசியின் மூலம் வெடித்து சிதறும் போக்கும் தொடங்கி விட்டது
(http://tamilsdirection.blogspot.com/2018/01/httpwww.html  )

அந்த போக்கினை விளங்கிக் கொள்ளவும்;

தாம் எதிர்க்கின்ற நிலைப்பாட்டினை எவ்வாறு அறிவுபூர்வமாக உரிய சான்றுகளின் அடிப்படையில் எதிர்ப்பது? என்பதற்கும்;

தமிழில் நான் பார்த்த காணொளிகளில் 'முன்மாதிரியாக' (Role Model), குறிப்பாக 'இந்துத்வா எதிர்ப்பு' ஆதரவாளர்களுக்கு, நான் கீழ்வரும் நபரின் காணொளிகளை பரிந்துரைக்கிறேன்.
 
அது போலவே, 'தினசரி' இதழில் வைரமுத்துவின் புலமைக் குறைவினை அம்பலப்படுத்தி வெளிவந்துள்ள கட்டுரைகளையும் படிக்குமாறு பரிந்துரைக்கின்றேன்.
 
ஆண்டாள் சர்ச்சை தொடர்பாக முன்வைக்கப்படும் மேலே குறிப்பிட்டுள்ள அறிவுபூர்வ விவாதங்களில், வைரமுத்துவின் 'பிம்ப பலூன்' மட்டுமின்றி, வைரமுத்துவின் 'பிம்ப வளர்ச்சிக்கு'  பெரும் பங்கு ஆற்றிய தி.மு. தலைவர் கருணாநிதியின் ' பிம்பமும்' வெடித்து சிதறத் தொடங்கியுள்ளது. அந்த பிம்பங்கள் வெடித்து சிதறும்போது, பிம்பங்களை சுயலாப நோக்கில் 'உரசாமல்', புறத்தில் 'யோக்கியராக' வலம் வந்த எழுத்தாளர்களின் சுயலாப வலைப்பின்னலும் சிதறி, அவர்களின் எழுத்துக்களில் உள்மறைந்திருந்த (Latent)  'சுயலாப நலன்களும்', 'நிர்வாணமாக' வெளிவரும். தமது தகுதி, திறமைகளின் அடிப்படையில் தாம் 'ஏங்கிய' வசதி வாய்ப்புகள் அளவுக்கு 'உயர' முடியாதவர்கள் எல்லாம், 'பொதுத் தொண்டராகி' புறத்தில் 'யோக்கியர்' வேடத்தில் வலம் வந்தவர்களும், அதே போக்கில் அம்பலமாகி, ஓரங்கட்டப்படுவார்கள்; பொது வாழ்வில் உண்மையான நேர்மையான பொதுத் தொண்டர்கள் மட்டுமே இடம் பெறும் வகையில்.

இந்துத்வா எதிர்ப்பு முகாமிலுள்ள அறிவுஜீவிகள் எவராவது வெளியிட்ட‌, மேலே குறிப்பிட்ட அறிவுபூர்வ விவாதங்களுக்கும், எனது பதிவுகளுக்கும்,  உணர்ச்சிபூர்வ இரைச்சலற்ற அறிவுபூர்வ விவாதங்கள் எதுவும் எனது தேடலில் கிடைக்கவில்லை; எவரும் அவற்றை எனது பார்வைக்கு அனுப்பி வைத்தால், நன்றி தெரிவித்து, அவற்றை எனது அறிவுபூர்வ ஆய்விற்கு உட்படுத்த முடியும்.

அறிவுபூர்வ விவாதங்கள் மூலமாக, தமது நிலைப்பாடுகளில் வெளிப்படும் குறைகளையும், தவறுகளையும் ஒப்புக்கொண்டு, திருத்தி பயணிப்பதே, ஒரு சமூகத்தில் புலமையின் வளர்ச்சிக்கு துணை புரியும். மாறாக 'தொல்காப்பிய பூங்கா'வின் குறைகளை வெளிப்படுத்திய தமிழறிஞர் நக்கீரன் சாகும் வரை சந்தித்தது போல, விமர்சித்தவர்களை தமக்குள்ள செல்வாக்கின் மூலம் இழிவுபடுத்தியும், அச்சுறுத்தியும் பயணிக்கும் 'பிரபலங்களை' எல்லாம் வெறுத்து ஒதுக்காத வரையில், தமிழ்நாடு புலமை வறட்சியில் பயணிப்பதைத் தவிர்க்க முடியாது.

தமிழ்நாட்டில் ' திராவிட நோய்களில்' சிக்கி, தமிழக பா.. பயணித்து வருவதை ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளேன்
(http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html

அதன் தொடர்ச்சியாக , 'தமது பக்கமே கோல் போட்ட’(same side goal) 'உணர்ச்சிபூர்வ வெறுப்பு அரசியலில்' தமிழக பா.. பயணித்து, அந்த ' திராவிட பலூன்களை' பாதுகாத்து வந்தது
(http://tamilsdirection.blogspot.com/2018/01/2-same-side-goal.html

அவ்வாறு 'திராவிட பிம்பங்கள்' வெடித்து சிதறுவதை தாமதப்படுத்தி வந்த போக்கினையும், வைரமுத்துவின் பங்களிப்பால் 'ஆண்டாள் சர்ச்சை'யின் மூலம் வெடித்து கிளம்பிய எழுச்சியானது ஓரங்கட்டி;

ஆண்டாள் சந்நிதியில் வைரமுத்து மன்னிப்பு கேட்ட பின், தனிப்பட்ட முறையில் வைரமுத்துவை இழிவுபடுத்தியதற்கு எச்.ராஜாவும் வைரமுத்துவிடம் மன்னிப்பு கேட்கும் நெருக்கடியையும் வளர்த்து வருகிறது.

அதன் மூலம்தமிழ்நாட்டின் செருப்பு அரசியலும்’ முடிவுக்கு வந்தாலும் வியப்பில்லை

தமிழ்நாட்டின் செருப்பு அரசியல்' முடிவுக்கு வந்தால் தான், இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் வெளிப்படும் உணர்ச்சிபூர்வ பேச்சுக்கள் எல்லாம் 'வடிவேல் பாணி காமெடிகளாகி';

ஆரோக்கியமான அறிவுபூர்வ விவாதங்கள் பொது அரங்கிலும், மீடியாவிலும், முன்னணிக்கு வரும்

சமூகத்தில் மேல் மட்டத்தில் இருப்பவர்கள் எல்லாம், தமது அறிவுக்கு தவறெனப்பட்டவுடன், அதை பகிரங்கமாக அறிவித்து திருத்திக் கொள்ளும்
போக்கானது;

அவ்வாறு அறிவுபூர்வ விவாதங்கள் முன்னணிக்கு வர துணை புரியும்.

நிகழ்காலத்தில், ‘சோடா பாட்டில்’ பேச்சுக்காக, "ஆண்டாள் நாச்சியாரின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்பு கோரினேன்" என்று ஜியர் சடகோப ராமானுஜர் அந்த துணிச்சலை வெளிப்படுத்தி, தமிழ்நாட்டிற்கு ஒரு நல்ல முன்மாதிரியாக (Role Model) நம்பிக்கை தந்துள்ளார்.

அவருக்கு முன், நானறிந்தது வரையில், அத்தகைய துணிச்சலை வெளிப்படுத்திய ஒரே தலைவர் .வெ.ரா அவர்கள் ஆவார்
(http://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_23.html  )

.வெ.ராவும் ஆச்சாரம் மிகுந்த வைணவ குடும்பத்தில் பிறந்தவர் என்ற அடிப்படையிலும்;

அவரால் முளை விட்டு வளர்ந்த 'திராவிடர்/திராவிட' தலைவர்கள் எவரிடமும் அந்த துணிச்சல் வெளிப்பட்டதில்லை, என்ற அடிப்படையிலும்;

தனது ஒரே ஆருயிர் நண்பர் ராஜாஜியின் ஈமச் சடங்கின் போது, தமது 'நாத்தீக பிம்பம்' பற்றி கவலைப் படாமல், சக்கர நாற்காலியுடன் தம்மை தூக்கச்சொல்லி, 'வலம் வந்து' 'ஆச்சார முறையில்' தமது இறுதி மரியாதையை .வெ.ரா வெளிப்படுத்தினார், என்ற அடிப்படையிலும்;

அந்த துணிச்சலானது, ஒப்பீட்டளவில், வைணவ பாரம்பரியத்தில் வந்தவர்களுக்கு கூடுதலாக இருக்குமா? என்ற ஆய்வினையும், நான் மேற்கொள்ள எண்ணியுள்ளேன்.
அந்த துணிச்சலுக்கு மக்கள் மன்றத்தில் வரவேற்பு கூடும் வாய்ப்பினையும் 'ஆண்டாள் சர்ச்சை' ஏற்படுத்தியுள்ளது.
அரசியலை பொதுவாழ்வு வியாபாரமாக்கி வளர்ந்த 'திராவிட பிம்பங்கள்' நொறுங்கும் போது;

அந்த போக்கில், தரகு/ரவுடி 'புலமையாளர்களை' அடிவருடி, 'பணம், செல்வாக்கு' ஈட்டி வந்த 'உணர்ச்சிமிகு' கவிஞர்களும், பேச்சாளர்களும், எழுத்தாளர்களும் தன்மான உணர்வு பெறுவார்கள்;


அவர்களால் ' திராவிட பிம்பங்களுக்கு' அடிமையான தமிழ் விடுதலை பெறும்;

'தொல்காப்பிய பூங்காவில் களைகள்' நூல் எழுதிய ' குற்றத்திற்காக' (?) சாகும் வரை, தனது நலன் விரும்பிகளின் பாதுகாப்பில் வாழ்ந்து மறைந்த தமிழறிஞர் நக்கீரன் போல;

வாழ வேண்டிய நெருக்கடியிலிருந்து தமிழ்நாடும் விடுதலை பெறும்;

தொல்காப்பியத்தில் வரும் 'இசை' (Music) என்ற சொல்லை, தவறாக 'ஒலி' (Sound) என நினைத்து, இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் விளங்காமல் உரையாசிரியர்கள் கொடுத்த விளக்கத்தின் அடிப்படையில் கற்பிக்கப்படும் தவறுகள் எல்லாம்;

எனது ' தமிழிசையின் இயற்பியல்' (Physics of Tamil Music-1996)  ஆய்வின் மூலம் வெளிவந்து;

பேராசிரியர்கள் ஜெயதேவன், வி.டி. அரசு, பொற்கோ, .இராசேந்திரன் உள்ளிட்ட இன்னும் பல, 'திராவிட'  கட்சிகளின் ஆட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்த, பெரும்பாலும் 'இந்துத்வா எதிர்ப்பு' தமிழறிஞர்களின் பார்வைக்கு வந்தும், அவர்கள் எல்லாம் என்னை தனிப்பட்ட முறையில் பாராட்டிய பின்னரும்;

கடந்த‌ சுமார் 20 வருடங்களாக தமிழில் இளங்கலை/முதுகலை மாணவர்கள் எல்லாம், யாப்பிலக்கணத்தை தவறாக பயின்று வரும் போக்கிலிருந்தும்

தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்கள் எல்லாம் விடுதலை பெறும் காலமும் நெருங்கி வருகிறது.கடும் நிதி நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஹார்வார்ட் பல்கலைகழகத்தில் உருவாகும் தமிழ் இருக்கையிலும், யாப்பிலக்கணம் தவறுதலாக கற்பிக்கப்படுவதிலிருந்து தப்பிக்கவும் வாய்ப்பிருக்கிறது
(http://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_15.html)


ஆண்டாளின் கருணையால் எனது ஆயுட்காலத்திலேயே அது அமுலாகும் நம்பிக்கையும் எனக்கு வந்துள்ளது. 

குறிப்பு:
 
'தமிழ் இசையியல் - புதிய கண்டுபிடிப்புகள்' என்ற எனது நூலை, சுமார் 7 வருடங்களுக்கு முன், தினமணி ஆசிரியர் வைத்தியநாதனிடம் கொடுத்தேன். இன்று வரை அந்த கண்டுபிடிப்புகள் தொடர்பாக, தினமணியில் அவரோ, அல்லது அவரது தூண்டுதலில் பேரில் வேறு எழுத்தாளரோ எழுதி ஏதும் வெளிவரவில்லையென்றால், தமிழில் இளங்கலை/முதுகலை மாணவர்கள் எல்லாம், யாப்பிலக்கணத்தை தவறாக பயின்று வரும் போக்கிற்கு பங்களித்த குற்றச்சாட்டிற்கு அவர் உள்ளாக மாட்டாரா? வைரமுத்து அதை எழுதியிருந்தால், இவ்வாறு நடந்திருக்குமா?

No comments:

Post a Comment