Thursday, November 16, 2017

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் 'தமிழ் இருக்கை' (Tamil Chair) (1);


சமஸ்கிருத ஆதரவு புலமையாளர்களிடமிருந்து கற்க வேண்டிய பாடம்?


ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் தொடர்பான திட்டம் தொடங்கப்படுவது அறிந்து, அறிவுபூர்வ பார்வையை இழந்து, உணர்ச்சிபூர்வமாக மகிழ்ந்து பாராட்டாமல்;

சமஸ்கிருத நூல்களை மொழி பெயர்ப்பது தொடர்பான ஹார்வர்ட் பல்கலைக்கழகத் திட்டமானது, பேரா.செல்டான் பொல்லாக் தலைமையில் செயல்படுவது தொடர்பான‌ குறைபாடுகளை சுட்டிக்காட்டி, தமது எதிர்ப்பினை 132 சமஸ்கிருத ஆதரவு புலமையாளர்கள் பதிவு செய்துள்ளார்கள்.

அதே செல்டான் பொல்லாக் தமிழைப் பற்றி, அபத்தமான, தவறான ஆய்வு முடிவுகளை வெளியிட்டது தொடர்பான, எனது அறிவுபூர்வ எதிர்ப்பு முயற்சிகளை ஏற்கனவே நான் பதிவு செய்துள்ளேன்.

“'மணிப்பிரவாள காலத்திற்குப் பின்னர் தான், சமஸ்கிருதத்தின் துணையுடன் தமிழில் இலக்கியங்களே வெளிவந்தன', என்று  தமிழ்நாட்டில் புகழ்பெற்ற துக்ளக் 'சோ' எழுதியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? உடனே யார் யார் கொதித்தெழுந்து துக்ளக் சோவைக் கண்டித்து போராட்டங்களும், கண்டன அறிக்கைகளும் வெளியிட்டிருப்பார்கள்; என்பதைப் பட்டியலிட வேண்டியதில்லை. ஆனால் அதே கருத்தையும், அதை விட இன்னும் அபத்தமான தமிழைப் பற்றிய கருத்துக்களையும், உலக அளவில் மிகவும் மதித்துப் போற்றப்படுகின்ற அமெரிக்க எழுத்தாளர் Sheldoon Pollock - ஷெல்டான் போல்லாக் – ‘The Language of the Gods in the World of Men – Sanskrit, Culture and Power in Premodern India ’ by Sheldoon Pollock  (permanent black - Delhi  2007) என்ற புத்தகத்தில் வெளிப்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் அப்புத்தகம் வெளிவந்து கடந்த 9 வருடங்களில், எவராவது அந்த அபத்தமான, தமிழைப் பற்றி இழிவுபடுத்தும்,  'ஆய்வுகள்' என்ற பெயரில் வெளிவந்துள்ளகருத்துகள் பற்றி கவலைப் பட்டிருக்கிறர்களா?” ( http://tamilsdirection.blogspot.sg/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_18.html )

இன்று ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக நிதி திரட்டி வருபவர்கள் உள்ளிட்டு, தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள் எல்லாம் உலக அளவில் புகழ் பெற்ற அறிஞர் ஒருவர், தமிழை இழிவுபடுத்தியதை இது வரை கண்டு கொண்டார்களா? இனியாவது கண்டு கொண்டு, தமது எதிர்ப்பினை பதிவு செய்வார்களா? அல்லது 'நமக்கேன் வம்பு?' என்று பாதுகாப்பு வளையத்தில் (Comfort Zone)  தொடர்ப் போகிறார்களா?

ஆனால் சமஸ்கிருதம் தொடர்பான தவறான ஆய்வுகளை வெளிப்படுத்திவரும் செல்டன் பொல்லாக்குடன், சமஸ்கிருத அறிஞர் ராஜிவ் மல்கோத்ரா அறிவுபூர்வ விவாதத்தில் ஈடுபட்டுள்ளதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.  ( http://tamilsdirection.blogspot.sg/2016/02/normal-0-false-false-false-en-us-x-none_15.html )

ஹார்வார்ட் பல்கலைக்கழகமானது கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பது தொடர்பான செய்திகளும் ஊடகத்தில் வெளிவந்துள்ளன. ( https://www.theguardian.com/business/2009/sep/11/harvard-yale-financial-crisis  & https://www.forbes.com/forbes/2009/0316/080_harvard_finance_meltdown.html#58e8884351dd  )

ஏற்கனவே ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் தொடர்பான வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ( https://sas.fas.harvard.edu/tamil )

அந்த நிலையில் 'தமிழ் இருக்கை' என்று தொடங்குவதற்காக அந்த பல்கலைக்கழகத்திற்கு தரப்படும் நிதியின் அடிப்படையில், வருடம் தோறும் எவ்வளவு நிதி செலவிடப்பட்டு, என்னென்ன திட்டங்கள் தமிழின் வளர்ச்சிக்காக செயல்படப் போகின்றன? என்ற கேள்விகளுக்கான விளக்கமானது, ஹார்வார்ட் பல்கலைக்கழகம் சார்பில் வெளிவந்ததாக தெரியவில்லை; வெளிவந்திருந்தால், அதை தெரிவிப்பவர்களுக்கு நன்றியுடன் அது தொடர்பான எனது கருத்துக்களை பதிவு செய்ய முடியும். இல்லையென்றால், ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திற்கு இருக்கும் நிதி நெருக்கடிக்கு உதவுவதே 'தமிழ் இருக்கையின்' முக்கிய பலனாக அமைந்து விடுமோ? என்ற ஐயமானது நீடிக்கும்.

அது மட்டுமல்ல, முதலில் குறிப்பிட்டுள்ளவாறு ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் தொடர்பான திட்டத்தில், சமஸ்கிருதத்திற்கு ஏற்படப்போகும் ஆபத்துகளை சுட்டிக்காட்டி உலகம் முழுவதும் உள்ள சமஸ்கிருத ஆதரவு புலமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளதையும் கணக்கில் கொண்டால்;

அதே போல, ஹார்வார்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கை மூலமாக தமிழுக்கு ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதா

தமிழை இழிவுபடுத்திய செல்டன் பொல்லாக் மேலே குறிப்பிட்டுள்ள ஹார்வார்ட் திட்டத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பதும், அவர் தமிழை இழிவுபடுத்தியதை, ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கு நிதி சேர்க்கும் தமிழ் ஆர்வலர்கள் எல்லாம் அதை எதிர்க்கும் துணிவின்றி இருப்பதும் உண்மையானால், அந்த ஆபத்துகள் நிஜமாகி விடாதா? (http://harvardtamilchair.org/faq )

செல்டன் பொல்லாக் இந்துத்வா எதிர்ப்பாளர். அதனால் அவர் தமிழை இழிவு படுத்தினாலும் பரவாயில்லை, என்று 'இந்துத்வா எதிர்ப்பு' உணர்ச்சிபூர்வ போதையில் தமிழ் புலமையாளர்கள் அதை கண்டு கொள்ளவில்லையாதிராவிட கட்சிகளின் ஆட்சிகளில் 'இந்துத்வா எதிர்ப்பும்', 'தமிழ் இன உணர்வும்' ஊழல் சுனாமியில் தமிழ்நாட்டை சீரழிக்க,  'சமூக முதுகெலும்பாக', அவரவர் 'தகுதி, திறமை'களுக்கு ஏற்ப 'பலன்கள்' அனுபவித்து (ஆனால் தமக்கு நெருக்கமான சமூக வட்டத்திற்குள் மட்டும் முணகி) உதவிய 'இந்துத்வா எதிர்ப்பு முற்போக்குகள்’ எல்லாம், தமிழ்நாட்டை கொள்ளையடித்ததை கண்டு கொள்ளாதது போலவே, அவர்கள் எல்லாம் 'இந்துத்வா எதிர்ப்பு' செல்டன் பொல்லாக் தமிழை இழிவுபடுத்தியதையும் கண்டுகொள்ளவில்லையா?  

காலனிய சூழ்ச்சியில் தமிழில் 'இனம்' என்ற சொல்லின் பொருள் திரிந்து, அந்த சூழ்ச்சியில் 'பெரியார்' .வெ.ரா அவர்கள் சிக்கி, திராவிடர்/திராவிட/தமிழர் அடையாளக் குழப்பங்களை அரங்கேற்றி, தமிழ் இலக்கியங்களையும், பாரம்பரியம், பண்பாடுகளையும் தமிழர்க்கு கேடென அறிவித்து, 'தமிழ் அடையாள அழிப்பு' போக்கில் பயணித்ததை, அறிவுபூர்வமாக எதிர்த்த மிழறிஞர்கள் யார்? 'நமக்கேன் வம்பு?' என்று ஒதுங்கிய தமிழறிஞர்கள் யார்? (‘தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize)  (4);  'இனம்' திரிந்த பொருளில் திராவிடர்?’; http://tamilsdirection.blogspot.sg/2015/06/depoliticize-4.html )

'தனிமனித அளவில் எவ்வளவு மதிக்கத்தக்கவர்களாக இருந்தாலும், .வெ.ரா அவர்களுக்கு 'இடிப்பார்களாக' இல்லாமல் பயணித்த, .வெ.ராவிற்கு நெருக்கமான, தமிழ் அறிஞர்களும், புலமையாளர்களும், மேலே குறிப்பிட்ட 'அடையாள அழிப்பிற்கு' பங்களித்த சமூக குற்றவாளிகள், என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.' ( ‘'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்' 'பெரியார்' .வெ.ராவா? அந்த சீரழிவுப் போக்கில்தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும்  பெற வேண்டிய, ஆய்வுகளின் பலன்கள் தாமதமாகின்றனவா?’; http://tamilsdirection.blogspot.sg/2017/10/blog-post_10.html )

அது போலவே, உலக அளவில் பெரும் செல்வாக்குள்ள செல்டன் பொல்லாக் தமிழைப் பற்றி வெளிப்படுத்தியுள்ள தவறான ஆய்வு முடிவுகளை கண்டு கொள்ளாததமிழ் அறிஞர்களும், தமிழ் ஆதரவாளர்களும்சமூக குற்றவாளிகள் ஆக மாட்டார்களாசைவத்தின் 'தமிழ் அடையாள' புரவலர் திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் சுவாமிகளின் ஆதரவோடு, 'குடி அரசு' இதழ் தொடங்கிய ஈ.வெ.ரா அவர்கள், திசை மாறி  'தமிழ் அடையாள அழிப்பு' போக்கில் பய‌ணித்ததை தடுக்காமல், ஈ.வெ.ராவிற்கு நெருக்கமாக பயணித்த அனைவருமே சமூக குற்றவாளிகள் ஆவர். 

இன்று இந்துத்வாவை 'தமிழ் எதிர்ப்பாக' கருதும் உணர்ச்சிபூர்வ பிரமை நோயில் பலரும் சிக்கி, ஆர்.எஸ்.எஸின் 'தாய்மொழிவழிக் கல்வி மீட்பு' முயற்சிகளை எல்லாம், தமிழ்வழிக்கல்வி மீட்புக்கு பயன்படுத்த தயங்கி வருகிறார்களா? (http://tamilsdirection.blogspot.co.uk/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html ) தமிழ் அழிந்தாலும் பரவாயில்லை, அந்த ஆதரவு தேவையில்லை, என்று அவர்கள் எல்லாம் கருதுகிறார்களா? அவ்வாறு பயணிப்பவர்களை எல்லாம் ஓரங்கட்டி, தமிழ்வழிக் கல்வியும்,( எனவே தமிழும்) மீட்கப்படும், என்பதும் எனது கணிப்பாகும்; லத்தீனைப் போல சமூக உயிரிழந்த தமிழுக்கான முயற்சியாக 'ஹார்வார்ட் தமிழ் இருக்கை' மாறாமல்.

1967க்கு முன், இது போல தமிழுக்கு எதிரான ஆய்வு முடிவுகள் வெளிவந்திருந்தால்;

இன்றுள்ள தமிழ்நாடு போல இல்லாமல், வலிமையான அறிவுபூர்வ மறுப்புகள், பல தமிழறிஞர்களிடமிருந்தும் வெளிவந்திருக்கும். செல்டன் பொல்லாக்கின் நூலை படித்து விளங்கிக் கொள்ளும் ஆங்கில அறிவுள்ள அண்ணாவும், நிச்சயமாக அந்த வரிசையில் இடம் பெற்றிருப்பார், என்பதும் என் கருத்தாகும்.

‘தீதும் நன்றும் பிறர் தர வாரா' (புறநானூறு 192) என்பதை மறந்து, தம்மிடம் உள்ள குறைகளை அடையாளம் கண்டு களையாமல், காலனிய சூழ்ச்சியில் சிக்கி, சமஸ்கிருதத்தின் மீதும், 'பார்ப்பனர்கள்'மீதும் பழி சுமத்தி, பயணித்த போக்கில், பதர்களின் ஆதிக்கத்தில் தமிழ் சிறையுண்டதால், செல்டன் பொல்லாக் போன்றவர்கள், எதிர்ப்பின்றி தமிழை இழிவுபடுத்தும் ஆய்வுகளை வெளியிட்டு வருகிறார்களா? என்ற விவாதம் அரங்கேற வேண்டிய நேரமும் வந்து விட்டது.

திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்கள் எல்லாம் ஆங்கிலம் உள்ளிட்ட உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது தொடர்பாக, பாமரத் தமிழன் மகிழ்வது இயல்பே.

அந்த மொழி பெயர்ப்புகளில் பிழை இருக்கிறதா? அந்த பிழைகள் காரணமாக, அம்மொழி பெயர்ப்புகளை நம்பி, உலகில் உள்ள அறிஞர்கள் எல்லாம் தமிழ் தொடர்பாக மேற்கொண்டு வரும் ஆய்விகளில் தவறுகள் ஏற்படாதா?

என்ற கவலையானது உலகில் உள்ள தமிழ் அதரவு புலமையாளர்களுக்கு இருக்கிறதா?

சமஸ்கிருத ஆதரவு புலமையாளர்களுக்கு சமஸ்கிருத மொழிபெயர்ப்புகள் தொடர்பாக, மேலே குறிப்பிட்டுள்ள கவலையானது, தமிழ் ஆதரவு புலமையாளர்களுக்கு தமிழ் தொடர்பான மொழிபெயர்ப்புகளில் இல்லையா?

என்ற ஐயமும் எனக்குள்ளது.

அல்லது பாமரத் தமிழன் மகிழ்வது போலவே, தமிழ் ஆதரவு புலமையாளர்கள் எல்லாம் உலக மொழிகளில் திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களின் மொழிபெயர்ப்புகள் வெளிவந்ததே போதும், என்று மகிழ்ந்து வாழ்கிறார்களா?

இல்லையென்றால், கடந்த சுமார் 10 வருடங்களாக;

உரையாசிரியர்களையும், அகராதிகளையும் நம்பி மேற்கொள்ளப்பட்ட தமிழ் ஆய்வுகளிலும், மொழிபெயர்ப்புகளிலும் உள்ள குறைபாடுகள் பற்றி, நான் வெளிப்படுத்திவரும் சான்றுகளை எல்லாம் இதுவரை எவராவது மறுத்துள்ளார்களா? இனியாவது மறுப்பார்களா? (https://www.amazon.com/DECODING-ANCIENT-TAMIL-TEXTS-TRANSLATION/dp/9811419264)

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் தொடர்பான திட்டம் தொடங்கியதை, சமஸ்கிருத ஆதரவு புலமையாளர்கள் கண்காணித்து, தவறுகளை சுட்டிக் காட்டியது போல, மத்திய அரசின் செம்மொழி நிறுவனம் தொடர்பான செயல்பாடுகளை, தமிழ் ஆதரவு புலமையாளர்களில் எவராவது கண்காணித்து, குறைகளை சுட்டிக்கட்டியுள்ளார்களா? அல்லது 'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும்' நோக்கில், தமக்கான பலன்களை அனுபவிப்பதிலேயே கவனம் செலுத்தினார்களா? முறையான விசாரணை மூலம் தவறுகளை அடையாளம் கண்டு களைந்து, சரியான சட்ட திட்டங்களை உருவாக்கி, அந்த முறையான சட்ட திட்டங்களின் அடிப்படையில் அந்நிறுவனம் பாரபட்சமின்றி தமிழின் வளர்ச்சிக்கு செயல்பட வேண்டுமானால், அந்த திசையில் மோடி அரசு செயல்பட, தமிழ்நாட்டில் உள்ள 'உணர்ச்சிபூர்வ இந்துத்வா எதிர்ப்பு' அனுமதிக்குமா? தமிழ் ஆராய்ச்சிக்கு என்று நிறுவப்பட்ட உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகமும், முதல்வர் எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின், நிதி நெருக்கடிகளில் சிக்கி பயணித்து வருவது உண்மையா? ( http://tamilsdirection.blogspot.sg/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html )

மேலே குறிப்பிட்ட மூன்று நிறுவனங்களில் வெளிப்படைத்தன்மையும் (Transparency), குறைகளை பொறுப்பேற்கும் தன்மையும் (Accountability), அமுலாக்கி, 'திராவிட அரசியல் ஊழல்' வழிகளில் புகுந்துள்ள‌ பதரானவர்களை வெளியேற்றி, மணியானவர்களை ஈர்த்து, நிதிப்பற்றாக்குறையின்றி செயல்பட வைப்பதே, இன்றைய அவசிய, அவசர தமிழ் மீட்புப் பணி என்பதும் எனது கருத்தாகும்.  

தமிழை வைத்து பணமோ, புகழோ ஈட்ட வேண்டிய அவசியமானது, எனக்கில்லை என்பது மட்டுமல்ல:

பணமும் புகழும் வந்து சேரும் ஆய்வுகளில் நான் ஈடுபட்டுள்ள நிலையில் ( http://drvee.in/?page_id=21 );

தமிழ் தொடர்பான ஆய்வுகளில் ஏன் உங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள்?” என்று என்னிடம் நேரில் கேட்ட தமிழ்ப் புலமையாளர்களும் இருக்கிறார்கள்.

'தமிழில் செய்துள்ள ஆய்வுகளுக்கு பதிலாக, இந்தியாவில், உலகில் வேறு எந்த மொழிகளிலாவது ஆய்வு மேற்கொண்டிருந்தால், உங்களை தலை மேல் வைத்து புகழ்ந்திருப்பார்கள்' என்று என்னிடம் தெரிவித்தவர்களிடம்;

"இசை மொழியியல் (Musical Linguistics)  மற்றும் இசையியல் (Musicology) தொடர்பாக பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள அளவுக்கு வேறு எந்த மொழியிலும் இல்லை என்று நான் கருதுவதால், வேறு எந்த மொழியிலும் நான் ஈடுபட்டிருந்தாலும், இந்த அளவுக்கு கண்டுபிடிப்புகள் வெளிப்பட்டிருக்காது" என்றும் தெளிவுபடுத்தினேன்.

எனவே ஹர்வார்டில் சமஸ்கிருதம் தொடர்பாக தொடங்கப்பட்ட திட்டமானது சமஸ்கிருதத்திற்கு கேடாகும் என்று சமஸ்கிருத ஆதரவு புலமையாளார்கள் எதிர்த்து வரும் பின்னணியில்;

அந்த சமஸ்கிருத திட்டத்தின் தலைவரான செல்டன் பொல்லாக் தமிழுக்கு கேடாகும் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ள சூழலில்;

ஹார்வார்டில் தொடங்கும் தமிழ் இருக்கையால், வருடத்திற்கு எவ்வளவு நிதி செலவிட்டு என்ன திட்டங்கள் செயல்படப் போகின்றன? அத்திட்டங்களால் தமிழுக்கு வளர்ச்சி ஏற்படுமா? தீங்கு நேரிடுமா? என்ற கேள்விகளை, எனது சமூக கடமையாக கருதி, தமிழ் ஆதரவு புலமையாளர்களை நோக்கி முன் வைக்கிறேன்; என் மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள் எல்லாம் இது போன்ற 'சர்ச்சைகளில்' ஈடுபடுவதை தவிர்க்குமாறு என்னை அறிவுறுத்தியுள்ள நிலையிலும்.

என்னை போற்றுவதும், தூற்றுவதும் அவரவர்க்கு உள்ள உரிமையாகும்

‘The Theory of Moral Sentiments’ (by Adam Smith; https://en.wikipedia.org/wiki/The_Theory_of_Moral_Sentiments) என்ற நூலில் அறிவுறுத்தியுள்ளவாறு, எனக்குள் உள்ள மூன்றாம் மனிதரின் (3rd person) எச்சரிக்கைகளுக்கு கட்டுப்பட்டு, எனது உள்ளார்ந்த ஈடுபாடுகளோடு (Passions) ஒன்றி வாழ்வதால், தமிழின் நலனுக்காக இந்த எச்சரிக்கையை முன் வைக்கிறேன். 

Note: Also visit : ‘Did Tamil & Sanskrit have common origin? Are the Tamils suffering from the deep rooted inferiority complex, after 1967?’; http://tamilsdirection.blogspot.co.uk/2017/04/sanskrit-have-common-origin-are-tamils.html

4 comments:

  1. வணக்கம் ஐயா,

    ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் 'தமிழ் இருக்கை' பற்றி அடியேன் மனதிலிருந்த கவலைகளைத் தகுந்த பல ஆதாரங்களுடன் இக்கட்டுரையில் பதிவு செய்திருக்கிறீர்கள். எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

    தமிழின் மேன்மையை அந்நியர்கள் மட்டுமே கூற வேண்டும் என்ற எண்ணப் போக்கில் எழுந்துள்ளதே இந்த ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் 'தமிழ் இருக்கை' முயற்சி.

    உங்களின் சீரிய சிந்தனைகளுக்கு வெற்றி கிடைக்கும்.

    அன்புடன்
    மா அருச்சுனமணி
    சிட்னி

    ReplyDelete
  2. தமிழுக்கு கிடைக்கப் போகும் மகுடம் என பலரும் கருதிக் கொண்டிருக்கும் நிலையில் , ஆபத்தான பரிமாணங்களை எடுத்துரைக்கும் கட்டுரை. உண்மையான தமிழறிஞர்கள் இது குறித்து விவாதிக்க வேண்டும்.

    ReplyDelete
  3. தமிழுக்கு கிடைக்கப் போகும் மகுடம் என பலரும் கருதிக் கொண்டிருக்கும் நிலையில் , ஆபத்தான பரிமாணங்களை எடுத்துரைக்கும் கட்டுரை. உண்மையான தமிழறிஞர்கள் இது குறித்து விவாதிக்க வேண்டும்.

    ReplyDelete
  4. தமிழுக்கு கிடைக்கப் போகும் மகுடம் என பலரும் கருதிக் கொண்டிருக்கும் நிலையில் , ஆபத்தான பரிமாணங்களை எடுத்துரைக்கும் கட்டுரை. உண்மையான தமிழறிஞர்கள் இது குறித்து விவாதிக்க வேண்டும்.

    ReplyDelete