Thursday, January 12, 2017

'மாய உடை அணிந்திருப்பதாக மக்களை ஏமாற்றி, 'நிர்வாணமாக' ஊர்வலம் வந்த;


'அரசனைப் பார்த்து,  கைக்கொட்டி அந்தச் சிறுவன் சிரிப்பது',  வாஸந்திக்கு தெரியவில்லையா?


எழுத்தாளர் வாஸந்தி எழுதியுள்ள 'காயமே இது பொய்யடா!'(தி இந்து) கட்டுரை எனது கவனத்தை ஈர்த்தது.

அக்கட்டுரையில் சசிகலா முன்பு முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் 'பணிந்து' வணங்கும் புகைப்படத்தை வெளியிட்டு;

"தன்மானம் உள்ளவன் தமிழன் என்று யார் சொன்னதுஆட்சிக்கு வந்தவர்களின் முதுகெலும்பு காணாமல் போய்விட்டது. இல்லை, அவர்களாகவே சந்தோஷமாகக் கழற்றி வைத்துவிட்டார்கள். நேற்று வரை வாய் பேசாமல், ஒரு சக்திவாய்ந்த நபருக்கு உதவியாளராக மட்டுமே இருந்ததாகச் சொல்லப்பட்டவர் காலில், ஒரு மாநில முதல்வர் விழுகிறார். முன்னதாக எல்லா அமைச்சர்களும் விழுந்தார்கள். நீங்களே எங்கள் தலைவி என்றார்கள். கட்சிக்காரர்கள் புதிய தலைவியின் போஸ்டருக்குப் பால் அபிஷேகம் செய்ததை நான் தொலைக்காட்சியில் கண்டு அதிர்ந்துபோனேன். கதைக்குள் கதை இருப்பதுபோல் அல்லவா இருக்கிறது?" என்று வெளிப்படுத்தியுள்ள கருத்து சரியே.

அக்கட்டுரை தொடர்பான வாசகர் கருத்தாக, வெளிவந்துள்ள, கீழ்வரும் கருத்தும் சரியே ஆகும்.

"சசிகலாவை வணங்கி தொழுவது வாஸந்திக்கு இப்போது குமட்டலாக ("கூச்சமும் அச்சமும்") இருக்கிறது.அதிமுகவின் கர்த்தாவாகிய எம்ஜிஆர் மறைவிற்கு பின்னர் ஜெயலலிதா என்கிற ஒரு முன்னாள் நடிகை பின்னால் அரசியல் வித்தகர்கள் அணிவகுத்த போதும் ஒரு கட்டத்தில் தாள் பணிந்த போதும் இதே அஜீரணக் கோளாறு பலருக்கும் நேர்ந்தது தான்.ஆனால் அந்த கசப்பை வெகுஜன ஊடகங்களின் முன் பகிர்ந்து கொண்டவர் எவருமில்லை.வாஸந்தியும் கூட தான்.ஒருவேளை அப்போது "கூச்சமும் அச்சமும்" வாஸந்திக்கு வரவில்லையென்றால் இப்போது மட்டும் ஏன் வர வேண்டும்?"

"அந்த கசப்பை வெகுஜன ஊடகங்களின் முன் பகிர்ந்து கொண்டவ"ராக, வாஸந்தி இருந்திருந்தால், அது மிகவும் பாராட்டுதலுக்குரியது.

இல்லையென்றால், அந்த காலக்கட்டத்தில், ஊடகத்தில் அதை பகிர்ந்து, சந்திரலேகா, அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தராக இருந்த அனந்த கிருஷ்ணன் சந்தித்த பாதிப்புகளை சந்திக்க அஞ்சி, மெளனமாக  இருந்திருந்தாலும் தப்பில்லை. அதனை இன்று பகிரங்கமாக ஒத்துக் கொள்வதிலும் அவமானமில்லை. ஏனெனில் 'அஞ்சுவது அஞ்சாமை பேதமை' (திருக்குறள் 428) ஆகும்.

'உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், அச்சமில்லைஎன்று பாடிய பாரதி;

தெருவில் இறுதி ஊர்வலமாக வரும் பிணத்தைப் பார்க்க அஞ்சியும் (பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் எழுதியுள்ள நூலில் வெளிவந்துள்ளபடி);

'செல்வாக்கு மூலம் காமராஜர் சிறைக்கு போனார்'  என்று .பொ.சி தனது சுயசரிதையில் வெளிப்படுத்தியது போல, காங்கிரசாரின் சிறைவாசம் இருந்தது தெரியாமல்;

சிறைக்கு அஞ்சி, புதுச்சேரிக்கு ஓடியதும், 'இரண்டால் உலகப் போர் முடிந்து விட்டதால், கைது செய்ய மாட்டார்கள் என்று நம்பி, தமிழ்நாட்டிற்குள் நுழைந்து கைதாகி;

'இனி காலனி ஆட்சியை எதிர்க்க மாட்டேன்'என்று மன்னிப்பு எழுதிக் கொடுத்து விட்டு, ஜாலியன்வாலாபாத் படுகொலையைக் கூட கண்டிக்காமல், பாரதி வாழ்ந்தது அறியாமையா? பேதமையா? (‘வழிபாட்டுப் புழுதிப் புயலில் சிக்கிய தமிழ்நாடு’; http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_5.html   );

எதுவாயிருந்தாலும், ஆட்சியில் இருப்பவர்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் அனுசரித்து சுக வாழ்வு வாழ்ந்த/வாழும், (எம்.ஜி.ஆர் முதல்வரானவுடன், சென்னை தி.நகரில் பொதுக்கூட்டம் போட்டு, எம்.ஜி.ஆரை கடுமையாக கண்டித்து பேசி, பின் சில தினங்களில் தமிழக அரசின் 'ஆஸ்தான கவிஞரானவுடன் அடங்கிப் போன‌) ,கண்ணதாசன் உள்ளிட்டு நம்மிடையே வாழ்ந்த/வாழும் பல கவிஞர்களை போல, ஆட்சியில் இருந்த‌, அன்று வெள்ளைக்காரனுக்கு, (இன்று ஆண்ட/ஆளும் அரசியல் கொள்ளைக்காரர்களுக்கு,)  நாட்டைக் காட்டிக் கொடுத்து, சுகவாழ்வு வாழ்ந்தவர் பாரதி, என்று எவராலும் குற்றம் சுமத்தமுடியாது

பாரதியையும், பாரதி வழி வாழ்வதையும் போற்றிய, கட்சி சார்பற்ற, எந்த கவிஞராவது, எழுத்தாளராவது, பேச்சாளாராவது, ஜெயலலிதா ஆட்சியின் போது, "அந்த கசப்பை வெகுஜன ஊடகங்களின் முன் பகிர்ந்து கொண்டவ"ராக இருந்தார்களா? 

அந்த போக்கில்,  'பாரதி வழி, காந்தி வழி, பெரியார் வழி' உள்ளிட்ட 'எல்லா வழிகளும்', 'ஒரே வழியாக'  சங்கமித்த பின், தமிழ்நாடானது, அரசியல் நீக்கத்தில் (Depoliticize), ஆதாய அரசியலில் தானே பயணிக்க நேரிடும்.  "அந்த கசப்பை வெகுஜன ஊடகங்களின் முன் பகிர்ந்து கொள்ள' பயந்து, திருக்குறள் (428) வழியில் வாழ்வதை, பகிரங்கமாக ஒத்துக் கொள்ளும் நேர்மையின்றி,  வாழ்ந்த/வாழும் அறிவு ஜீவிகள் எல்லாம், அதற்கு காரணமான, சமூக குற்றவாளிகள் இல்லையா? இன்று அந்த 'சமூக குற்றவாளிகளை' அடையாளம் காட்டும் 'சமூக தொண்டராக', சசிகலா வலம் வருவதில், வியப்புண்டோ?

பாரதி வழியில் வாழ்வதை விட, திருக்குறள் வழியில் வாழ்வதை, பகிரங்கமாக ஒத்துக் கொண்டு யார் வாழ்ந்தாலும், அது பாராட்டுதலுக்குரியதே ஆகும். தமிழ்நாட்டில் யாராயிருந்தாலும், அவர்களின் பேச்சும், எழுத்தும், அவர்கள் வாழும் வாழ்வின் அடிப்படையிலேயே, தகவல் பரிமாற்ற வலிமை (Communication strength)  பெறுகின்றன, அல்லது இழக்கின்றன; குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சாதாரண மக்களிடையே. 

எனவே "அந்த கசப்பை வெகுஜன ஊடகங்களின் முன் பகிர்ந்து கொண்டவ"ராக, வாஸந்தி இருந்திருக்கவில்லை என்றாலும், அது தவறில்லை. அதை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தால், அந்த நேர்மையானது, மிகவும் பாராட்டுதலுக்கு உரியதாகும்..

"தன்மானம் உள்ளவன் தமிழன் என்று யார் சொன்னது?ஆட்சிக்கு வந்தவர்களின் முதுகெலும்பு காணாமல் போய்விட்டது. " என்று வாஸந்தி ஜெயலலிதா மறைந்த பின்னர், எழுதியுள்ளதானது, இன்று அவருக்கு முன்னரே பொது அரங்கில் வெளிப்பட்டு வரும் போக்கு(Trend)  ஆகும்.

சசிகலா குடும்பத்தினரின் அச்சுறுத்தலுக்குள்ளாகி தமது சொத்தை விற்ற, கங்கை அமரன் போன்ற ஒவ்வொருவரும் துணிச்சலுடன் பேசத் தொடங்கியுள்ளனர். (“ஆம்... எங்கள் சொத்தை சசிகலாதான் அபகரித்தார்!” - கொந்தளிக்கும் கங்கை அமரன்; http://www.vikatan.com/news/coverstory/76049-sasikala-encroached-my-land-illegally-alleges-gangai-amaran.artதமிழ்நாடெங்கும் அடிமட்ட தொண்டர்கள் சசிகலாவின் தலைமையை நிராகரித்து வருவதானது, குமரி முதல் சென்னை வரை அரங்கேறி வருகிறது. உதாரணத்திற்கு ஒன்று:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கலந்தாய்வு கூட்டம்;
கீரங்கலத்தில் உள்ள 14 .தி.மு. கிளைகளும் கலைக்கப்பட்டுள்ளன, தீபாவிற்கு ஆதரவு தெரிவித்து; 'தமிழக அரசியல்'; 04 -  01  - 2017

அதிமுக பொதுச்செயலராக சசிகலா பதவியேற்ற அதே நேரத்தில் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக தொண்டர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தின் பல இடங்களில் துக்க தினமாக அதிமுகவினர் அனுசரித்தனர்.’ (http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-cadre-commits-suicide-against-sasikala-elect-as-cm-271009.html)

ஜெயலலிதாவால், ஐந்து ஆண்டுகள் கட்சியை விட்டு நீக்கப்பட்டு, பின் மன்னிப்பு கடிதம் கொடுத்து இணைந்த சசிகலாவை, பதவியிலிருப்போர் தங்கள் சொத்துக்களை பாதுகாத்துக் கொள்வதற்காக ஆதரிக்கலாம்; .தி.மு..,வின் அடிமட்ட தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்.”- .தி.மு.., பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்நிலை பேச்சாளர் ஜெயவேல், கட்சியிலிருந்து விலகி, வெளியிட்ட அறிக்கையில். http://www.dinamalar.com/news_detail.asp?id=1683079

திருக்குறள் ( 471) நெறி மறந்து, ஜானகி எம்.ஜி.ஆர் வழியில், அவர் சந்தித்ததை விட, இன்னும் மோசமான விளைவுகளை சந்திக்க உள்ள திசையில், சசிகலாவின் அரசியல் பயணமானது, துவங்கி விட்டது.’ (‘தமிழ்நாட்டின் திருப்பு முனையில் நலன்களின் மோதல்;      தண்ணீரில் இருந்து தரைக்கு வந்துள்ள முதலையா சசிகலா?’; http://tamilsdirection.blogspot.in/2017/01/blog-post.html )

சசிகலாவின் இன்றைய அதிகாரத்திற்கு காரணமான ஜெயலலிதாவின் 'மர்மமானமருத்துவ சிகிச்சை பற்றியும், மரணம் பற்றியும் பொதுமக்களிடையே விவாதங்களும், அதிர்ச்சி தரும் வதந்திகளும் வலம் வந்து கொண்டிருக்கும் சூழலிலும்;

 தமிழ்நாட்டில் அது பற்றி இன்றும் எழுத பயப்படும் எழுத்தாளர்கள் எல்லாம்;

மீண்டும் தண்ணீருக்கு திரும்ப முடியாத அளவுக்கு, தரையிலிருந்து, வெகு தூரம் வந்து விட்ட முதலையாக சசிகலா வெளிப்பட்டாலும், இன்னும் அந்த எழுத்தாளர்கள், 'அந்த பழைய' அச்சத்திலேயே வாழ்கிறார்களா?

“தன்மானம் உள்ளவன் தமிழன் என்று யார் சொன்னது?ஆட்சிக்கு வந்தவர்களின் முதுகெலும்பு காணாமல் போய்விட்டது." என்று எழுதியுள்ள வாஸந்தியும்,  அந்த‌  வரிசையில்  இடம் பெற்றுள்ளாரா

அது பற்றி மேற்குறிப்பிட்ட கட்டுரையில் எழுதாததால், அந்த ஐயம் வந்துள்ளது. ஏற்கனவே எழுதியிருந்தாலும், அல்லது இனி எழுதினாலும், அந்த ஐயமானது, அகன்று விடும்

'அஞ்சுவது அஞ்சாமை பேதமை' (திருக்குறள் 428) என்ற வகையில், அச்சத்தினை உருவாக்கி, ஜெயலலிதா ஆட்சி நடத்திய போக்கில், ஜனநாயகத்தின் தூண்கள் சிதைந்ததை, கீழ்வரும் காணொளியில், தி.க. தலைவர் கி.வீரமணி அவர்கள் விளக்கியுள்ளார். (https://www.youtube.com/watch?v=07BOOYo5veg   )

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின், ஜனநாயகத்தின் தூண்களை சிதைக்க,(கி.வீரமணி பார்வையில்) "ஜெயலலிதாவின் நிழலாக இறுதி வரை இருந்து, மெய்க்காப்பாளராக, சேவகியாக, சிறந்த பாசம் காட்டிய தங்கையாகவே வாழ்ந்த" சசிகலாவை, 'ஆரிய - திராவிட இனப் போராட்ட' அணுகுமுறையில், 'திராவிடர்/திராவிட'(?) தலைவராக, ஆதரித்துள்ளார்.  "அ.தி.மு.க.வின் வளர்ச்சி ஒவ்வொன்றிலும் எங்கள் பங்கு இருக்கிறது. இது திராவிடர் கட்சி, ஆரியர்கள் கட்சி அல்ல." என்று சசிகலாவின் தம்பி திவாகரன் கருத்து தெரிவித்து உள்ளார். (http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-s-brother-divakaran-slams-centre-271865.html ) ஜெயலலிதா ஆரியரா? திராவிடரா? அ.இ.அ.தி.மு.க வில் 'தி' என்பதானது 'திராவிடர்'  என்று மாறி, 'அனைத்திந்திய அண்ணா திராவிடர் முன்னேற்ற கழகம்' என்று பெயர் மாறப் போகிறதா? என்ற கேள்விகளுக்கு, விடை வருமா?

 "‘இந்தியாவில் என்றுமே அரசியல் போராட்டங்கள் நடைபெற்றதே இல்லை. நடப்பவை அனைத்தும் ஆரிய - திராவிட இனப் போராட்டமே’ என்பார் பெரியார். " - சசிகலாவை ஆதரித்து, தி.க தலைவர் கி.வீரமணி ( ‘தி இந்து’; பேட்டி 13 – 01 -  2017; பேட்டியின் கீழே வெளிவந்துள்ள ஒரு கருத்து. ‘இதே பிஜேபி கூட ஜெ கூட்டணி வைக்கும் பொழுது ......மற்றும் திமுக கூட்டணி வைக்கும் பொழுது ...............இந்த ஆரிய திராவிட போர் பற்றி எல்லாம் இவர் கருத்து சொல்வது இல்லை’) இந்திய விடுதலைக்கு முன், ஈ.வெ.ரா அவர்கள், 'திராவிட நாடு பிரிவினை' கோரிக்கைக்கான ஆதரவினை, ராஜாஜி மற்றும் அவர் சார்பு பிராமணர்களிடம், பகிரங்கமாக கோரி பெற்றதானது;

 "‘இந்தியாவில் என்றுமே அரசியல் போராட்டங்கள் நடைபெற்றதே இல்லை. நடப்பவை அனைத்தும் ஆரிய - திராவிட இனப் போராட்டமே’ என்ற அடிப்படையிலா? 

மேற்குறிப்பிட்ட காணொளியின்படி, ஜெயலலிதா கொடுத்தது 'ஆரிய அல்வா' என்றால், சசிகலா கொடுப்பது 'திராவிட அல்வா' ஆகும்.  (‘சசிகலா ஆதரவில் தி.க கி.வீரமணியும் கம்யூனிஸ்ட் தலைவர்களும்; 'புதிய ஆரிய - திராவிட நோயில்' வேறுபடுகிறார்களா?’ ; http://tamilsdirection.blogspot.in/2016/12/blog-post.html )

மேற்கத்திய 'ரேஸ்' (Race) என்ற பொருளில், காலனிய சூழ்ச்சியில் நுழைந்ததே, 'ஆரிய, திராவிட' அல்வாவாகும். (http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html )
   
காலனிய சூழ்ச்சியான‌ 'ஆரிய - திராவிட அல்வா'விலிருந்து விடுதலை ஆகாமல்:

1967க்குப் பின் முதல்வர் அண்ணாவையும், 'பெரியார்' ஈ.வெ.ராவையும் மனம் வெறுத்து பொது வாழ்விலிருந்து ஒதுங்கத் தூண்டிய, தமிழ்நாடானது, சீரழிவிலிருந்து விடுதலை ஆக முடியுமா?


அவ்வாறு  'ஆரிய - திராவிட அல்வா அரசியலில்' சிக்கி, ஜனநாயகத்தின் தூண்கள் சிதைக்கப்பட்டதே, ஜெயலலிதாவின் 'மர்மமான' மருத்துவ சிகிச்சைக்கும், மரணத்திற்கும் காரணமா? அதே பாணியில் இனி யார் ஆட்சி செய்ய முயன்றாலும், அவர்களுக்கு ஜெயலலிதாவின் மரணமானது, அபாய எச்சரிக்கை ஆகாதா? 

'ஜெயலலிதா' என்ற கேடயத்தின் வலிமை பற்றிய, அந்த 'வலிமையை' இழந்து, 'அந்த கேடயத்தின் இடத்தை ஆக்கிரமிப்பதில்' உள்ள 'புதை குழிகள்' பற்றிய, 'அறியாமையில்', டிஜிட்டல் யுகத்தில் (Digital Age), "அப்போல்லோ மருத்துவமனையையும் போயஸ் தோட்டமாகவே கருதிக் கொண்டு, யாரையும் உள்ளே விட மறுத்த சசிகலாவுக்கு "சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்கிறோம்" என்று அப்போது உறைத்திருக்க நியாயமில்லை" ( 'புதிய ஜனநாயகம்';ஜனவரி 2017) என்பதன் விளக்க உரையே, இனி நடக்க இருக்கும் வரலாறு ஆகும். 

எனவே 'திராவிட தேர்தல் அரசியலை தொடங்கி வைத்தவர் அண்ணா என்பது வரலாற்றில் இடம் பெற்று விட்டது.

1965 இந்தி எதிர்ப்பு போராட்ட 'வீரர்' நடராஜனின் ஆதரவுடன்;

அதை முடித்து வைப்பவர் சசிகலாவா? என்ற கேள்வியும் வரலாற்றில் இடம் பெறத் தொடங்கியுள்ளது.'( http://tamilsdirection.blogspot.in/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html ) அந்த 'ஆரிய - திராவிட அல்வா' போக்கிலேயே, ஈ.வெ.ரா அவர்களும், 'பெரியார் சிறைக் கூண்டுடன்' புதைக்கப்படுவாரா? இல்லையா? என்பதானது, தி.க.தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட 'பெரியார்' கட்சிகளின் செயல்பாடுகள் மூலம் முடிவாகி வருகிறது.

ஜெயலலிதாவின் 'மர்மமான' மருத்துவ சிகிச்சை பற்றியும், ஜெயலலிதாவின் மரணம் பற்றியும், எழுத, பல  எழுத்தாளர்களும், இதழ்களும் பயப்படும் அளவுக்கு, அவ்வாறு ஜனநாயகத்தின் தூண்கள் சிதைக்கப்பட்டதானது, இன்னும் தொடர்கிறதா?  அல்லது 'பண பலத்தில்' ஊடகங்களில் பல‌ 'மயங்கி', அது போன்ற ஜனநாயக துண்கள் எல்லாம் 'சிதைந்தது போல' , 'மன்னனின் மாய ஆடை போல'. 'பொய்யான அச்ச சூழலை', உருவாக்கி வருகிறார்களா?

அதே போலமோடியின் பணநீக்கம் தொடர்பாக, சரியான கேள்விகளை எழுப்பியிருந்தாலும், அதே கட்டுரையில் அது இடம் பெற வேண்டிய தேவை என்ன

ஜெயலலிதாவின் 'மர்மமானமருத்துவ சிகிச்சை பற்றியும், ஜெயலலிதாவின் மரணம் பற்றியும் பல எழுத்தாளர்கள் எழுத பயப்படுவ்து போலமோடியின் பணநீக்கத்தை விமர்சித்து எழுத எவரும் பயந்திருக்கிறார்களா? மோடிக்கு பயப்படாமல், தமிழ்நாட்டு ஊடகங்களில் பல சசிகலாவிற்கு பயப்படுகிறார்களா? அல்லது அது 'மன்னனின் மாய ஆடை'  அச்சமா?

'அரசனைப் பார்த்த மாத்திரத்தில் எல்லோர் முன்பும் கைக்கொட்டிச் சிரித்தானே, அந்தச் சிறுவனை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்!' என்று வாஸந்தி தெரிவித்துள்ள கருத்தானது;

ஜெயலலிதாவின் 'மர்மமானமருத்துவ சிகிச்சை பற்றியும், ஜெயலலிதாவின் மரணம் பற்றியும், எழுத பயப்படும் எழுத்தாளர்களுக்கும், இதழ்களுக்கும் சரியாக இருக்கலாம். தமிழ்நாட்டில் மேல் நடுத்தர, வசதியான குடும்பங்களிலும் பலர் இருக்கலாம்.

ஆனால் சாதாரண மக்களிடையிலும், குறிப்பாக கிராமப்புறங்களிலும், 'கைக்கொட்டிச் சிரிப்பதானது', மிக பலமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. ( https://en.wikipedia.org/wiki/The_Emperor's_New_Clothes

பா.ஜ.க உள்ளிட்ட தேசிய, திராவிட கட்சிகளும், தலைவர்களும் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை கோராமல், ஒதுங்கியுள்ள சூழலில்; 'ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம்' என்று சொன்னவர்கள், 'ஆதாயம்' பெற்று அடங்கி வரும் சூழலில்;  

 சசிகலாவிற்கு எதிரான சமூக ஆற்றல்களின் ஒரே குவியப் புள்ளியாக;

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற ஒரே காரணத்தின் அடிப்படையில் தீபாவிற்கு பெருகி வரும் ஆதரவும், தமிழ்நாட்டு 'அறிவு ஜீவிகளை' பார்த்து, 'அந்த சிறுவன் கை கொட்டி சிரிக்கும்' ஒலியே ஆகும். அது வாஸந்தி போன்றவர்களுக்கு கேட்கவில்லையென்றாலும், தி.க.தலைவர் கி.வீரமணிக்கும் கேட்கவில்லையென்றாலும், அது அவர்கள் புரியும் சமூக குற்றமே ஆகும்.

'அந்த சிறுவனைப் போல, கை கொட்டி சிரிக்க' முடியாமலும், 'சிரிக்கும் ஒலியை' கேட்க கூட பயப்பட்டும், 'பாதுகாப்பு வளையம்' என்ற சிறையில் வாழும் தமிழர்கள் எல்லாம், வாழும் போதே செத்த பிணங்கள் ஆவர். அந்த பிணங்களின் வாடையின்றி வாழ்பவர்களே, உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் ஒன்றி, இன்பமாக வாழ முடியும், என்பதும் எனது அனுபவமாகும்.( http://tamilsdirection.blogspot.in/2016/02/style-definitions-table.html )

குறிப்பு:

1. கிரானைட் ஊழலை விசாரித்த சகாயம் ஐ.ஏ.எஸ்க்கு 'ரூ.150 கோடி ரூபாய் தருவதாக பேரம் நடந்தும்' (http://www.dinamalar.com/news_detail.asp?id=1690061 ), அதில் விலை போகாமல், ஊழல் ஒழிப்பில் அவர் உறுதியாக தொடர்கிறார்.
"இன்னும், 10, 15 ஆண்டுகளில், ஊழல் ஒழிக்கப்படும். அதற்கு எடுத்துக்காட்டு,சென்னையில், விவசாயிகள் பிரச்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, 20 ஆயிரம் இளைஞர்கள் ஒன்று கூடியது."
என்று அவர் தெரிவித்துள்ள கருத்தில், நானும் உடன்படுகிறேன்.

2. "அண்ணன் மகள் தீபா, அரசியலில் குதிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்ட நிலையில், அவரது இல்லம் தேடி, தினந்தோறும் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க., தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். தி.மு.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட பல கட்சித் தொண்டர்களும், தீபாவின் பின்னால் அணி திரள தயாராகி விட்டனர்." (http://www.dinamalar.com/news_detail.asp?id=1689992 ) என்ற செய்தி உண்மையானால், ஆதாய அரசியலுக்கு எதிரான சுனாமி தொடங்கி விட்டதா? வாழும் போதே செத்த பிணங்கள் எல்லாம், பொது அரங்கின் (public domain)  ஓரத்தில்,  ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை கோரும் போக்கிற்கு எதிரான ஒரு பக்கமாக ஒதுங்கும் போக்கும் தொடங்கி விட்டதா? என்ற ஆய்வுக்கும் தேவை எழுந்துள்ளது.

3. ஜெயலலிதாவின் 'மர்ம மரணம்' தொடர்பாக விசாரணை வேண்டி, நீதி மன்றத்தையோ, ஆளுநரையோ நாடாத தீபா, அந்த விசாரணை கோரிக்கையை முன்னெடுத்துள்ள ஓபிஎஸ் அணி செல்வாக்கில், 'சசிகலாவின் எடுபிடியோ'? என்று அவரை 'சுயலாப'நோக்கின்றி ஆதரித்தவர்கள் எல்லாம் சந்தேகிக்கும் அளவுக்கு, தீபா 'செல்லாக்காசாகி' வருகிறார்.


No comments:

Post a Comment