Saturday, November 5, 2016


'ஆனந்த விகடன்'  ப.திருமாவேலனும்;

 

ஈ.வெ.ராவை, 'பெரியார்' பிம்ப சிறையில் நீட்டிக்க செய்கிறாரா?(1)



'பெரியாரைப் புரியாத பெரியாரிஸ்ட்டுகளும்... தமிழ் தேசியவாதிகளும்...!’ என்ற தலைப்பில்  ப.திருமாவேலன்  எழுதிய கட்டுரையானது எனது கவனத்தை ஈர்த்தது.

'நவம்பர் 1 - தமிழ்நாடு உருவான நாள்'  தொடர்பான  விவாதங்களில், பெரியாரிஸ்டுகளும், தமிழ்த் தேசிய சிந்தனையாளர்ளும்,  மேற்கொண்ட நிலைப்பாடுகளில் உள்ள  குறைபாடுகளை, இக்கட்டுரை சரியாக வெளிப்படுத்தியுள்ளது, என்பது என் கருத்தாகும்.

“ ‘‘பூரணவிடுதலை, பிரிவினை வேண்டும் என்று சொல்பவன் நான். எவ்வளவு எல்லையைக் குறைத்துக் கொண்டாலும் கவலை இல்லை. எனக்குச் சென்னை நகரம் முக்கியம் அல்ல. அந்நியன் ஆதிக்கமற்ற அந்நியன் சுரண்டலற்ற பூரண சுயேட்சையுள்ள பிரதேசம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதுதான் தேவை. சென்னையே போனாலும் மீதியுள்ள இடம் சுதந்திரம் ஆனால் போதும்என்று தெளிவுபடுத்தியவர் அவர்.” 

என்று ஈ.வெ.ரா அவர்களின் 'தனித் தமிழ்நாடு' கோரிக்கை பற்றி, சரியாகவே வெளிப்படுத்தியுள்ளது, இக்கட்டுரை.

ஆனால், தாய்மொழியான தமிழ், பாரம்பரியம், பண்பாடு போன்ற ஆணிவேர்களையே  நோய்களாக கருதி, வெறுத்து, முன்வைத்த இந்த கோரிக்கையானது, எவ்வாறு பொதுவாழ்வில் சுயநலக் கள்வர்கள் வளர வழி வகுத்தது? என்பது தொடர்பாக, கீழ்வரும் தொடர் உள்ளிட்ட‌, எனது பதிவுகளில், உரிய சான்றுகளுடன் வெளிப்படுத்தியுள்ளேன்.
‘தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize)(10); காந்தி பிம்பம் உள்ளிட்ட பிம்பங்களின் சமூகத் தூண்டலை (Social Induction) எவ்வாறு ஒழிக்க முடியும்?’; https://tamilsdirection.blogspot.com/2016/10/depoliticize10-social-induction.html

அவற்றை கணக்கில் கொள்ளாமல், ஈ.வெ.ராவை 'பெரியார்' என்ற பிம்ப‌ சிறையில் சிக்க வைக்கும் போக்கிலேயே,  இக்கட்டுரையானது  வெளிவந்துள்ளது. 

ஈ.வெ.ரா அவர்கள், 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழக்கத்துடன் முன் வைத்த, 'தனித் தமிழ்நாடு' கோரிக்கையை, "எலி வளை, எலிகளுக்கே" என்று கார்டூன் மூலம், ஒரு காலத்தில் கிண்டல் செய்த போதும்;

'எலி' தொடர்பாக ஈ.வெ.ரா முன் வைத்த 'அடையாளச் சிக்கலை', ‘ஆனந்த விகடன்’ கணக்கில் கொள்ளவில்லை.(குறிப்பு கீழே)

“எந்த வெற்றியும் இனப்போராட்டத்தால்தான் பெற முடியும் (24.1.1950) என்று சொன்னவர் அவர். அதனால்தான் சுத்த தெலுங்கும் சுத்த மலையாளமும் சுத்த கன்னடமும் தமிழ்தான் என்று நினைத்து அந்தப் பகுதியையும் உள்ளடக்கிய தனி திராவிட நாடு, தனி தமிழ்நாடு கேட்டார்.” என்றும் ஈ.வெ.ரா அவர்களின்,  'தனித் தமிழ்நாடு' கோரிக்கை பற்றி, சரியாகவே வெளிப்படுத்தியுள்ளது, மேற்குறிப்பிட்ட‌ கட்டுரை.

மேற்கத்திய பொருளில் 'இனம்' மற்றும் 'சாதி' திரிந்து, விளைந்த அடையாளச் சிதைவு தொடர்பான மேற்கத்திய சூழ்ச்சியில், சிக்கி, சாத்தியமற்ற தனிநாடு கோரிக்கையில் ஈ.வெ.ரா அவர்கள் பயணித்தாரா? ( ‘நல்லவேளை, திராவிடநாடு பிரியவில்லை; https://tamilsdirection.blogspot.com/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html )


‘சென்னை ராஜதானி’ முதல்வரான ராஜாஜியின் இந்தித் திணிப்பே, 1938 இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலம், 'தமிழ்நாடு பிரிவினை' போக்கிற்கு உயிர் கொடுத்ததா? உண்மையில் அண்ணாதுரையின் செல்வாக்கில், நீதிக்கட்சியை 'திராவிடர் கழகமாக' மாற்றி, சட்டசபை புறக்கணிப்பு மேற்கொள்ளாமல், ஈ.வெ.ரா நீதிக்கட்சி தலைவராகவே, மற்ற தலைவர்களுடன் இணக்கமாக பயணித்திருந்தால், அன்றைய 'சென்னை ராஜதானி', இந்திய விடுதலையின்போது, தனிநாடு ஆகியிருக்க வாய்ப்பு இருந்ததா? ( ‘ஆனைமுத்து வெளிப்படுத்திய அபூர்வ 'சிக்னல்' (2); அன்றைய 'சென்னை மாகாணம்' ஆனது, தனிநாடு ஆக இருந்த வாய்ப்பு, எப்படி கெட்டது?’; https://tamilsdirection.blogspot.com/2015/12/normal-0-false-false-false-en-us-x-none_27.html ) அதே ராஜாஜி, பின் 1965இல் அண்ணாதுரையுடன் கூட்டு சேர்ந்து, 'தூண்டி' விட்டு, வேடிக்கை பார்த்த, 1965 இந்தி எதிர்ப்பு போராட்டமானது, ஈ.வெ.ராவையே அவமதித்து, பொது மக்களுக்கும், பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கும் போக்கை, தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தி, அதன் தொடர் விளைவாக, தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் சீரழிய காரணமானதா? (https://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html)

மேற்குறிப்பிட்ட கட்டுரையில், இந்திய விடுதலை தொடர்பாக, “வெள்ளையர், ஆரியர் ஆகிய இருவரின் உள் உளவு ஒப்பந்த ஆட்சி மாறியே ஆக வேண்டும்” என்று கருத்து தெரிவித்த ஈ.வெ.ரா, இந்திய விடுதலைக்கு முன், 'திராவிட நாடு பிரிவினை' கோரிக்கைக்கு, ராஜாஜி மற்றும் அவர் சார்பு பிராமணர்களின் ஆதரவையும் கோரி பெற்றது ஏன்? ( "We going to soon get the cooperation of my friend and comrade, Acharya (Rajagopalachari), for the separation of Dravida Nadu. Not only him, but all Brahmins ... are going to support our demand for separation"- Periyar EVR ; http://en.wikipedia.org/wiki/C._R._formula);


சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் விமானவிபத்தில் 'மர்மமான' முறையில் சாகாமல், லண்டன் போயிருந்தால்;

'தனி திராவிட நாடு' கிடைத்திருக்குமா? அதைக் கெடுக்க சதியாக அந்த விமான விபத்து நிகழ்ந்ததா? அப்படி அன்றைய சென்னை மாகாணம் 'தனி நாடாக' பிரிந்திருந்தால், அது ‘வெள்ளையருக்கும், யாருக்கும் இடையிலான, உள் உளவு ஒப்பந்த ஆட்சியாக’ இருந்திருக்கும்?  

காலனி ஆட்சியை வீழ்த்த, புரட்சிகர திசையில் பயணித்த, விடுதலை போராட்டத்தை, காவு கொடுத்து, காலனி நலன்களுக்கு 'நோகாத' (Harmless) வகையில் சாதகமாக, திசை திருப்பியவர், என்ற அடிப்படையில், காந்தியை, ‘பிரிட்டன் உளவாளி' (British agent ) என்று நீதிபதி கட்ஜு கருத்து தெரிவித்துள்ளார்.(http://justicekatju.blogspot.com/2015/03/gandhi-british-agent-post-is-bound-to.html ) இந்திய விடுதலை போராட்டமானது, காலனி ஆட்சிக்கு சாதகமான 'உள் உளவு' திசையில்  பயணித்த போக்கிலேயே, 'திராவிட நாடு பிரிவினை' கோரிக்கையும் பயணித்ததா?

அந்த திசையில் தமிழ்நாடு பயணித்தன் விளைவாக, இந்திய விடுதலைக்குப்பின், 1952இல் நடந்த முதல் பொது தேர்தலில், காங்கிர‌ஸ் கட்சியானது, பெரும்பான்மை பலம் பெற முடியாமல் தோற்றதா? பின் 'திராவிட நாடு பிரிவினையை' ஆதரித்த, ராஜாஜியின் முயற்சியால்,  எதிர்க் கட்சிகளை தம் பக்கம் இழுத்தே, காங்கிரஸ் ஆட்சி அமைத்ததா? பின் அதே ராஜாஜியின் முயற்சியால், 1967இல், தமிழ்நாடு 'தேசிய நீரோட்டத்திலிருந்து' பிரிந்து, திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் சிக்கியதா?

அதனால் விளைந்த 'அரசியல் நீக்கத்தில்'(Depoliticizing), 'ஆதாய' அரசியல்' தலையெடுக்க, இன்று, ஆங்கிலவழிக் கல்வி மாணவர்களிடமும், இளைஞர்களிடமும், 'தமிழும், தமிழரும்' அடையாள வீழ்ச்சிக்குள்ளாகி, 'இந்தியர்' அடையாளமானது, வளர்ந்து வருகிறதா; மேற்கத்திய மோகத்துடன் பின்னிப் பிணைந்து? அவர்களை மீட்கும் வல்லமையானது, தாய்மொழிவழிக்கல்வியை ஊக்குவிக்கும் ஆர்.எஸ்.எஸிடம் மட்டுமே உள்ளதா?  'அந்த மீட்சியின்' மூலமே, ஈ.வெ.ராவும் 'பெரியார் பிம்ப சிறையிலிருந்து', விடுதலை ஆவாரா?

என்பது போன்ற விவாதங்களை, இன்னும் எத்தனை காலம் தான், இருட்டில் வைக்க முடியும்?

இந்திய விடுதலைக்கு முன், பிரிட்டன், அமெரிக்கா உளவு அமைப்புகளின் செயல்பாடுகள் தொடர்பான கோப்புகளை 'இரகசிய நீக்கம்'(Declassify), இதுவரை செய்யாமல் இருப்பதை பற்றி, இந்தியாவில் (அந்நிய சுயநலன்களுக்கான 'பிரிவினை', 'உள் உளவு' போக்கில் பயணிக்காமல், உண்மையான சமூகப் பற்றுள்ள, நாட்டுப் பற்றுள்ள) அறிவுஜீவிகள் கவலைப்பட்டார்களா? இனியாவது, அதற்கான 'அழுத்தம்' கொடுப்பார்களா? வளர்ந்த நாடுகளில் இரகசிய நீக்கத்திற்கான காலக்கெடுவை, இந்தியாவிற்கும் அமுல்படுத்தக் கூடாதா?

எனது இசை ஆராய்ச்சிக்கு முந்தைய காலக்கட்டத்தில், 'பெரியார்' இயக்கத்தில் 'கொள்கையாளராக'  (Theoretician) பயணித்து, பல கட்டுரைகளை 'விடுதலை', 'உண்மை', 'The Modern Rationalist' ஆகிய இதழ்களில் வெளியிட்டும், தனியாகவும், கூட்டாகவும் பல புத்தகங்களை வெளியிட்டும் பயணித்த நான்;

எந்த சுயலாப நோக்கமும், தேவையும் இன்றி, தமிழ் மொழி, தமிழர்கள் மீட்சிக்காக முன்வைக்கும்;

ஈ.வெ,.ரா அவர்கள் தொடர்பான விமர்சனங்களை, இது போன்ற கட்டுரையாளர்கள் புறக்கணிப்பதால், எனக்கு ந்த இழப்புமில்லை.

ஈ.வெ.ரா அவர்கள் முன்னிறுத்திய அறிவுபூர்வ போக்கானது, 'பெரியார்' பிம்ப உணர்ச்சிபூர்வ போக்கில் மீள வழியின்றி, சிறைபட்டுள்ளதையே, அது உணர்த்துகிறதா? என்பதும் ஆய்விற்குறியதாகும்.

இன்னும் சரியாக சொல்ல வேண்டுமானால், எனக்கு பணமும், புகழும் ஈட்டும் வாய்ப்புளை அதிகரிக்கச் செய்து வரும், இசை இயற்பியல்(Physics of Music), இசைத் தகவல் தொழில் நுட்பம்(Music Information Technology), பழந்தமிழ் இலக்கியங்கள் உள்ளிட்ட ஆய்வுகளுக்கிடையில், 'நேரம்' ஒதுக்கி, எழுதி வரும் பதிவுகள் இவையாகும். (https://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-in-x-none.html )

இன்று ஈ.வெ.ரா அவர்கள் உயிரோடிருந்தால், இது போன்ற விவாதங்களை ஊக்குவித்து, தமது நிலைப்பாடுகளில், தவறு என்று வெளிப்படுவதை, 'ஈகோ' (Ego) சிக்கலின்றி, துணிச்சலுடன், பகிரங்கமாக அறிவித்து, திருத்திக் கொண்டிருப்பார்;

என்பதையே அவரின் வாழ்க்கை வரலாறு உணர்த்துகிறது. ( ‘கறுப்பு – வெள்ளை (அல்லது சிகப்பு) பாதிப்புகளிலிருந்து விடுபடுவோம்’; https://tamilsdirection.blogspot.com/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html) நேர்மையான சுய சம்பாத்தியமின்றி, 'பார்ப்பன எதிர்ப்பு' பொதுவாழ்வு வியாபாரியாக  அவர் பயணித்தார், என்று அவரின் கொள்கை எதிரிகள் கூட, ஈ.வெ.ரா அவர்கள் மீது குற்றம் சுமத்த மாட்டார்கள்.

எனது பதிவுகள் தொடர்பாக, இன்று வெளிப்படாத விவாதம், வரும் காலத்தில் வெளிப்படவும் வாய்ப்பிருக்கிறது.

மேற்குறிப்பிட்டது  போன்ற கட்டுரைகளையும், எனது பதிவுகளையும் படிப்பவர்கள் எல்லாம், பெரும்பாலும் 50 வயதுக்கும் அதிகமானவர்களா? 

'பெரியார் யார்?' என்று மாணவர்களிலும், இளைஞர்களிலும், குறிப்பாக ஆங்கிலவழியில் படித்தவர்கள், கேள்விகள் கேட்கும் சூழலில் (   'தமக்கென வாழா மன நோயாளிகள் '; https://tamilsdirection.blogspot.com/2015/02/12_17.html  ); 

அவர்கள்  புலத்திற்கு செல்லாமல்,  இவை வெளிவருகின்றனவா?

கடந்த சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் மூலம், அரசியல் வெளி (Political Space) காலியாகி விட்டதா? என்ற கேள்வியை ஏற்கனவே பார்த்தோம். (https://tamilsdirection.blogspot.com/2016/05/normal-0-false-false-false-en-in-x-none.html ) 

தமிழ்நாட்டில் அந்த அரசியல் வெற்றிடம் என்ற குறைந்த அரசியல் காற்றழுத்த தாழ்வு மண்டிலமானது, மாற்றத்திற்கான 'அரசியல் புயலின்' மூலம், அரசியல் நீக்கத்தை (Depoliticizing)  முடிவுக்கு கொண்டு வரும். 

அப்போது உருவாகும் புதிய அரசியல் விவாதங்களில், தமிழும், தமிழரும், தமிழ்நாடும் சீரழிந்ததற்கான காரணங்களை தேடும்;

நிவாரணங்களை தேடும் விவாதங்களில்;

மேற்குறிப்பிட்டது  போன்ற கட்டுரைகளும், எனது பதிவுகளும் முக்கிய இடம் வகித்தால் வியப்பில்லை.

சென்னை வெள்ள நிவாரணத்தில், அரசியல் கட்சிகளை 'தாமதமான' வால்களாக்கி;

சென்னை முதல் கன்னியாகுமரி வரை இளைஞர்களும். மாணவர்களும் 'செயல்பூர்வமாக' உதவிய‌ போக்கானது;

அந்த புதிய அரசியலில் விவாதங்கள் அறிவுபூர்வமாகவும், ஆக்கபூர்வமாகவும் நடைபெறும், என்பதன் முன்னறிவிப்பாகும். (‘ஈ.வெ.ராவின் 'பொதுத் தொண்டனுக்கானஅளவுகோலின்படி, நமது  'யோக்கியதை '  எப்படி?’; https://tamilsdirection.blogspot.com/2016/10/blog-post.html )

எனவே தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சிக்கான காலமானது, அதிக தொலைவில் இல்லை.

குறிப்பு : 

அதே நேரத்தில்,ஈ.வெ.ராவின் 'குடிஅரசு' இதழில் தொடர்ந்து விளம்பரங்கள் செய்து வந்த பெருமையானது, ‘ஆனந்த விகடன்’ நிறுவனர் எஸ்.எஸ்.வாசனைச் சாரும். அதே போல, முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் காவல் துறையை கிண்டல் செய்து, கார்டூன் வெளியிட்ட காரணத்திற்காக, மன்னிப்பு கேட்காமல் சிறை சென்ற பெருமையும், பின் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, வெற்றி பெற்று, கிடைத்த 'செக்'கை 'பிரேம்'(Frame) மாட்டி வைத்த பெருமையும், எஸ்.எஸ்.வாசனின் மகன் எஸ். பாலசுப்பிரமணியத்தைச் சாரும். இவர்கள் போன்ற மனிதர்கள் அரிதாகி வரும் காலம் இது; ஈ.வெ.ரா மறைவிற்குப்பின், 'பெரியார்' பிம்பம் மூலமாக, பொது வாழ்வு வியாபாரிகளான, 'பெரியார் சமூக கிருமிகள்' வளர்ந்துள்ள‌ சூழலில்.

No comments:

Post a Comment