Tuesday, January 26, 2016

"கி.வீரமணியின் ஒற்றர் நீங்கள்"; &  "தன்னுடைய  கடனுக்காக  பிராமணசார்பு, பாஜக  சார்பாக  மாறிவிட்டார் "


இரண்டு வதந்திகளும், விளக்கங்களும்



தி.க தலைவர் "கி.வீரமணியின் ஒற்றர் நீங்கள்" என்று என்னைப் பற்றி கருதியிருந்ததாக;

நான் திரு.கி.வீரமணியை விட்டு விலகிய பின், திருச்சி காஜாமலை காலனியில் வசித்த போது, எனது வீட்டில் என்னை சந்தித்த, தற்போது தி.மு.கவில் இருக்கும் திருச்சி செல்வேந்திரன் தெரிவித்தார். அந்த தகவலே, கீழ்வரும் எனது ஐயத்திற்கு விளக்கம் தந்தது.

1990களில்,  பெரியார் இயக்க முக்கிய நபர்களான‌ , தஞ்சை இரத்தினகிரி, கோவை.இராமகிருட்டிணன் உள்ளிட்ட இன்னும் பலர், எனக்கு தெரிவிக்காமல், ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தியபின், திரு.கி.வீரமணியின் ஒழுங்கு நடவடிக்கை மூலம் இயக்கத்தை  விட்டு வெளியேற்றப்பட்டார்கள். அதன்பின், அந்த பிரச்சினைக்கு சம்பந்தமேயில்லாத‌,  நான் தான் அவர்களின் வெளியேற்றத்திற்கு காரணம் என்று, தமிழ்நாட்டிலுள்ள 'பெரியார்' ஆதரவாளர்கள் மத்தியில், என்ன அடிப்படையில், பரப்புரைத்தார்கள்? என்ற கேள்விக்கு, மேற்குறிப்பிட்டது விளக்கமாக அமைந்தது.

அந்த அளவுக்கு(அன்று எண்ணிக்கையிலும், ஆயுதத்திலும், பணத்திலும் முதலிடத்தில் இருந்த, உரத்தநாடு தி.கவினரின் ஆதரவை பெற்றிருந்த, 'பிளாட்'(PLOT) பக்கம் போக இருந்த திரு.கி.வீரமணியின் ஆதரவினை, விடுதலைபுலிகள் பக்கம் திருப்ப உதவிய‌)  திரு.கி.வீரமணி எனக்கு ஏன் முக்கியத்துவம் கொடுத்தார்? என்பதையும் நான் விளக்கியாக வேண்டும்.

பெரியார் இயக்கத்தில் நுழைந்து, மொழிபெயர்ப்பாளராகவும், கட்டுரையாளராகவும், பேச்சாளராகவும் நான் வளர்ந்து, திரு.கி.வீரமணிக்கு நெருக்கமான பின், அந்த நெருக்கத்தை எனது சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்பதில் எச்சரிக்கையுடன் இருந்து, அவர் மீதும், இயக்கத்தின் மீதும் என் பார்வைக்கு வரும் குறைகளை, ஒளிவு மறைவின்றி, அவ்வப்போது மடல்கள் எழுதி, நேரில் கொடுத்து வந்தேன். அம்மடல்கள் சிலவற்றை தஞ்சை இரத்தினகிரியிடமும், பிற்காலத்தில் திருச்சி பெரியார் மையத்தில் இருந்தவர்களிடமும் காண்பித்து நெறிப்படுத்தியதுண்டு; திரு.கி.வீரமணியிடம் கொடுக்கும் முன்.

இவையெல்லாம் அவர் என் மீது மிகுந்த மதிப்பும்,அன்பும் கொள்ள காரணங்களாகின என்பதும், அவ்வாறு இன்றும் நான் வாழ்வதால், பிரதமர் மோடிக்கு நெருக்கமான இந்துத்வா புலமையாளர்களாகவும், எனது சமூக வட்டத்தில் இருப்பவர்களுக்கு, மோடி பற்றியும், இந்துத்வா அமைப்புகள் பற்றியும், என் பார்வைக்கு வரும் குறைகளை, ஒளிவு மறைவின்றி, அவ்வப்போது தெரிவித்து வருகிறேன். திரு.கி.வீரமணி என் மீது காட்டியவாறே, அவர்களும் காட்டுவதோடன்றி, அவர்களது சமூக வட்டத்தில் எனது கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன‌, என்பதையும் தெரிவித்துள்ளார்கள்.

தனி மனித உறவுகளில் லாப நட்டம் பார்த்து, நெருங்கும்/ஒதுங்கும், 'விபச்சார' தொழில்நுட்ப புலமையாளர்களை' ஒதுக்கி; என் மீது தாம் காணும் குறைகளையும், என்னுடன் நேர்மையாகவும், சமூக பொறுப்புணர்வுடனும் விவாதிப்பவர்களையே,  எனது சமூக வட்டத்தில் அனுமதித்து வாழ்கிறேன்.

அந்த துணிச்சலிலேயே;

தமிழ்நாட்டில் எதிரெதிர் கொள்கைகளில் உள்ளவர்கள், உணர்ச்சிபூர்வமின்றி, 'பிறர்பார்வை அறிதல்' (Empathy) வழியில் அறிவுபூர்வமாக, விவாதிப்பதை ஊக்குவிக்க விரும்புகிறேன். 

'தமிழ்வழிக்கல்வி மீட்பு மையம்' அறிமுக விழாவிற்கும்;
(தமிழ்வழிக் கல்வி மீட்சி தொடர்பாக, நான் மேற்கொண்டு வரும் முயற்சிகளில் சந்தித்த சவாலையும், ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.'  ‘தமிழ் அழிவு சுனாமி’யிலிருந்து தமிழை மீட்க முடியுமா?'; http://tamilsdirection.blogspot.in/2016/06/blog-post.html )

விவாதங்களை வரவேற்கும் நோக்கில் உருவாகிவரும், முந்தைய பதிவில் குறிப்பிட்டுள்ள‌ புத்தகங்களில், முதல் புத்தகத்திற்கான முன்னுரைகளுக்கும்;

'பெரியார்' மற்றும் ஆர்.எஸ்.எஸ்  அமைப்புகளின் தலைவர்களையும் அணுக எண்ணியுள்ளேன்.

அதன் தொடர்ச்சியாக, 'பெரியார்' ஆதரவு கல்லூரி மாணவர்களிடையே, ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும், ஆர்.எஸ்.எஸ் ஆதரவு கல்லூரி மாணவர்களிடையே, 'பெரியார்' தலைவர்களும், உரையாற்றும் நிகழ்ச்சிகளை, ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டு வருகிறேன்; அதற்கான சமூக சூழல் கனிந்து வரும் என்ற நம்பிக்கையில்.

அடுத்து,  இன்று வலம் வரும் இன்னொரு வதந்தி:


"தன்னுடைய  கடனுக்காக  பிராமணசார்பு, பாஜக  சார்பாக  மாறிவிட்டார் " என்று என்னை பற்றி வதந்தி வலம் வருவதாக‌ அறிந்துள்ளேன். 

எனது கடனின் பின்னணி: 

(சமூக பார்வையில்) வைப்பாட்டி/ அல்லது இரண்டாவது மனைவி - யுடனும், அந்த தொடர்பில் பிறந்த மகனுடனும் வாழ்ந்து வந்த‌ எனது மாமனருக்கும், சட்டபூர்வ மனைவியான எனது மாமியாருக்கும்,  ஒரே மகளான எனது மனைவிக்கும் இடையே,  1976 முதல் நடந்து வந்த பல வழக்குகள், எனது வருமானம் முழுவதையும் விழுங்க; மனித உரிமை, பெண் உரிமை அமைப்புகளின் தலைவர்களின் 'யோக்கியதை' பற்றியும் நான் தெரிந்து கொள்ள‌.
( http://www.driftline.org/cgi-bin/archive/archive_msg.cgi?file=spoon-archives/third-world-women.archive/third-world-women_2002/third-world-women.0205&msgnum=1&start=1&end=442  )

கூடுதலாக எனது ஆய்வுகளும், எனது மகன் சில வருடங்கள் நடத்திய கணினி தொழிலும் சேர்ந்து, (, திருச்சி பெரியார் மையத்தில் இருந்து, சுயநலக்கள்வராக நான் அடையாளம் கண்டு, எனது சமூக வட்டத்திலிருந்து நான் அகற்றிய நபர், எனக்கு தெரியாமல், நான் கடனில் மூழ்கிவிட்டேன் என்று , தனது சமூக வட்டத்தில் பரப்பும் அளவுக்கு) க‌டனில் சிக்கினேன்.

1980களில் தி.க தலைவர் ( அப்போது மிகவும் செல்வாக்கில்) கி.வீரமணி, யார் மூல‌மோ அறிந்து, தானாகவே உதவ- வழக்குகளுக்கு உதவி, எனது மாமனாருடன் இருந்த பிரச்சினையிலிருந்து என்னை விடுவிக்க‌-  முன் வந்தார். நான் மறுத்து விட்டேன்.

பின் மாமியார் இறந்தவுடன், சுமார் 30 வருடங்கள் வழக்குகள் நடத்தி, அலுத்த நான், என் மாமனார் இறந்தவுடன்,  அந்த வைப்பாட்டி/இரண்டாவது மனைவி -யின் மகனுடன் (அண்ணா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த நாமக்கல் முத்துசாமியின் வைப்பாட்டி/ அல்லது இரண்டாவது மனைவி - யின் மகளை மணந்தவர்; எம்.ஜி.ஆர் இறக்கும் முன், சத்யா ஸ்டுடியோவில் நடத்திய திருமணம்; ஜானகி எம்.ஜி.ஆருக்கு அந்த முத்துச்சாமியின் வைப்பாட்டி/ இரண்டாவது மனைவி நெருக்கமானவர்)  நிபந்தனையின்றி(unconditional surrender) சமரசமாகும்படி, எனது மனைவியை கட்டாயப்படுத்தி, அந்த பிரச்சினையிலிருந்து நான் விடுபட்டேன்.

லண்டனில் வாழும் நண்பர் தொல்காப்பியன், அவரின் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் வாழும் நண்பர்கள் புதுடெல்லியில்   IAS officer ஆக பணியாற்றிய எனது நண்பர் உள்ளிட்டவர்கள், தாமாகவே எனக்கு உதவி, என்னை கடனில் மூழ்காமல் காப்பாற்றினார்கள். அதை நான் இப்போது  திருப்பி கொடுப்பதை, வாங்க‌ மறுத்து வந்தவர்கள், நான் தொடங்க உள்ள தமிழ்வழிக்கல்வி மீட்பு மையத்திற்கு பயன்படுத்திக் கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர்.

பின் ஆய்வுகளை நிறுத்தி, புதுக்கோட்டையில் கல்லூரி முதல்வர், பின் சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் என்று பணியாற்றி, முழுமையாக 2010இல் கடன் சுமையிலிருந்து விடுபட்டேன். எனது ஆய்வுகள் மூலம், தங்கள் பல்கலைக்கழகத்திற்கு புகழ் சேர்க்கும் ஆய்வுகளுக்காக‌ ; மாதம் ரூ 1 லட்சம் சம்பளத்தில் பணியாற்றுமாறு, வற்புறுத்திய போதும், நான் பதவி விலகி, வருகை பேராசிரியாக 2 செமஸ்டர் பணியாற்றி, பின் 2013 முதல் NIT Trichy இல் ஆய்வு ஆலோசகராக ( Project Consultant & visiting professor)  பணியாற்றி வருகிறேன்; மாதம் ரூ 1.5 லட்சம் சம்பளத்தில்  ' நிபுணர் பேராசிரியராக'  பணியாற்ற வாய்ப்பு இருந்தும், அதை விரும்பாமல்; எனது ஆய்வுகள் மூலம் மேற்கத்திய நாடுகளுக்கு சென்று,  மிக அதிக வருமானம் ஈட்டக்கூடிய வாய்ப்புகள் இருந்தும், அதையும் விரும்பாமல்.

இதில் வியப்பென்னவென்றால், அந்த நபர், நான் கடன் சுமையிலிருந்து வெளிவந்த பின்னும், பல வருடங்கள் நான் கடனில் இன்னும் மூழ்கியிருப்பதாக, என் மகளிடம் சொல்லி வந்திருக்கிறார் என்பது கடந்த வருடம் அறிந்தேன். இது போன்ற முயற்சிகள் எல்லாம், எனது குடும்பத்தில் ஏற்படுத்திய சீர்குலைவுகளை,  'ஆபத்தான சமூக சிக்னலாக'( Dangerous Social Signal)  நான் கருதியதாலேயே, இசை ஆராய்ச்சிகளில் முழுமையாக இருந்த எனது கவனத்தில் ஒரு பகுதியை, திருப்பி, அந்த ஆய்வின் மூலம், இத்தகைய சீர்கேடுகளுக்கான முளையானது, 1944இல் தோன்றி, எவ்வாறு வளர்ந்து, இன்று உச்சத்தை தொட்டுள்ளது என்று கண்டுபிடிக்க நேர்ந்தது.


ஒருவரின் சொந்த வாழ்வு, குடும்ப வாழ்வு, அவர் வாழும் சமூகம், ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக தொடர்புடையது என்பது பற்றியும், அந்த சமூக பிணைப்பில் 'குடும்ப மதிப்பீடுகள்' வகிக்கும் முக்கிய பங்கு பற்றியும், கீழ்வரும் இணைய தளத்தில், எளிதில் புரியும் வகையில் விளக்கப்பட்டுள்ளது.
https://prezi.com/2jsow7toikpm/how-changes-in-the-society-affects-the-family-values/ 
 

குடும்ப மதிப்பீடுகளை சீர்குலைக்கும் அளவுக்கு, சமூக நச்சுக் கிருமிகள்,  'பெரியார்' முகமூடியில் வலம் வருகிறார்களா?

மிகுந்த மதிப்பீடுகளுடனும், சமூக அக்கறையுடனும் இருந்த எனது குடும்பத்தில், எனது தொடக்க கால ஆய்வு உதவியாளர்களாக பங்களிப்பு வழங்கிய எனது மனைவியும், கூடுதலாக எனது ஆய்வுகள் வழியில் ' நடனத்தின் இயற்பியல் (Physics of Dancing) ' ஆய்வுகளுக்காக, நன்கு 'உருவாகி' வந்த என் மகளும், எப்போது, எப்படி 'திசை திரும்பி', 'பெரியார்' போர்வையில் ஒழுக்கக்கேடான, (ஊழல் ஒழிப்பு ஒழுங்காக செயல்பட்டால், சிறைக்கு செல்ல வேண்டிய) வழிகளில் 'அபரீதமான' செல்வம் ஈட்டிய நபரை முன்மாதிரியாக(role model) கொண்டு, நான் 'வாழ்வியல் முட்டாள்த்தனமான' முறையில் குடும்பம் நடத்தியதாக கருதி, என்னை வெறுக்கத் தொடங்கினார்கள்?

ஒருவன் 'புத்தனாக' இருந்தாலும், தனது வியாபார தொடர்பால் (Business Association), அப்பா - மகள் உறவு முறிவது அறிந்து, அதில் தொடர்ந்தால், அவன் புத்தனா? சமூக நோய்க்கிருமியா? அதிலும், எனது ஆய்வுகள் வழியில், 'நடனத்தின் இயற்பியல் (Physics of Dancing)' ஆய்வுகளுக்காக, நன்கு 'உருவாகி' வந்த என் மகளின் உள்ளார்ந்த ஈடுபாட்டை (Passion) சிதைத்து, தனது 'சமூக கிருமி' நோயில் சிக்க வைத்து,  'திசை திருப்பியது', எவ்வளவு மோசமான சமுக குற்றம்? 

மூக கிருமிகள் எல்லாம் மனசாட்சியின்றி, தமது சுயநலன்களுக்காக, முதுகுக்குப் பின்னால் எவ்வளவு இழிவான பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள்? என்பதும், னது சமூகவியல் ஆய்விற்குதவிய தனித்துவமான உள்ளீடாகும்.

 
அந்த நபர் 'பெரியார் கொள்கையாளர்' என்ற போர்வையில், எனது சமூக வட்டத்தில் நான், ஏமாந்து அனுமதித்திருக்கவில்லையென்றால், அவர் எனது குடும்பத்தில், இந்த அளவுக்கு, பாதிப்பு ஏற்படுத்தியிருக்க முடியுமா?

அவ்வாறு பாதிப்பு ஏற்படுத்தியதை அறிந்த, 'பெரியார்' கொள்கையாளர்களில் யார்? யார்? அவரைக் கண்டித்தார்கள்?

யார்? யார்? அவரை சமூக கிருமியாக அடையாளம் கண்டு ஒதுக்கினார்கள்?

யார்? யார்? அந்த நபர் எவ்வாறு ஒழுக்ககேடான வழிகளில் பணம் ஈட்டினார்? என்று ஆராய்ந்தார்கள்? 1967 ஆட்சி மாற்றத்திற்குப்பின், தமிழ்நாட்டில் 'திராவிட' அரசியல் கொள்ளைக்குடும்பங்களின் 'அரவணைப்பில்' உருவாகி வளர்ந்துள்ள, 'காவல்துறை, அரசு வக்கீல், நீதிபதி, சிறை உள்ளிட்ட‌ ஊழல் வலைப்பின்னலில்', 'திருச்சி பெரியார் மையம்' மூலம் 'வலிமை' பெற்று, இடம் பெற்று, அந்த 'புத்தர்' உருவானாரா? அந்த நபர் இன்று யார், யாரோடு, எப்படி, எப்படி, 'கூட்டு' சேர்ந்து, எவ்வளவு ஒழுக்கக்கேடான, சட்ட விரோத வழிகளில் சம்பாதிக்கிறார்? (http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post_5.html )

அது பற்றிய கவலையின்றி, யார்? யார்?  அவரிடம் 'வாய்க்கரிசி' பெற்று 'நட்பினை' தொடர்ந்தார்கள்? 'பெரியார் கட்சிகளில்', 'ஊழல் ஒழிப்பை' பற்றி கவலைப்படாத போக்குகள், இது போன்ற 'பெரியார் சமூக கிருமிகள்' எல்லாம்,  'புத்தர்' முகமூடியில் வளர காரணமானதா?


'பெரியார் முகமூடி'யில் வாழும் அந்த ‘புத்தரின்’ குற்றமும்,  அதைத் தட்டிக்கேட்காமல், அவருடன் 'உறவு' கொண்ட 'பெரியார் கொள்கையாளர்களின்' செயலும், சமூகவியல் ஆய்விற்குள்ளானதன் காரணமாக, வெளிப்பட்டதே கீழ்வரும் கண்டுபிடிப்பாகும்.

“தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் ஒரு மனிதர் தவறு செய்ய முற்படும்போது, அதைத் தடுப்பதும், மீறி புரிந்த தவறை உணர்ந்து, திருந்தி வாழ்வதும் அந்த மனிதர் வாழும் குடும்பத்தில், சமூக வட்டத்தில், சமூகத்தில் உள்ள சமூக செயல்நெறி மதகுகளின் (Social Functional Checks) வலிமையைப் பொறுத்ததாகும்……………..1944இல் திராவிடர் கழகம் உருவான பின், பொது அரங்கில் உணர்ச்சிபூர்வ போக்குகள் தலை தூக்கி, சமூக ஒப்பீடு நோயில், லாப நட்டம் பார்க்கும் 'கள்வர்' நஞ்சானது, சமூக ஆற்றல் ரத்த ஓட்டத்தில் கலந்து ஏற்படுத்திய பாதிப்புகள்,  தமிழ்நாட்டில் இருந்த சமூக செயல்நெறி மதகுகளை எந்த அளவுக்கு சிதைத்தன?”
http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_18.html


சமூகக்கேடான வழிகளில் பணம் ஈட்டியவருடன் கூட்டு சேர்ந்து, பணம் சம்பாதிக்க, அப்பா உறவு முறிந்தாலும் பரவாயில்லை என்று வாழும் மகளை, அந்த குடும்ப உறவுகளில் எவராவது கண்டித்தார்களா? இல்லையென்றால் அந்த குடும்ப உறவுகள், 'பணத்தையே தெய்வமாக வணங்கும்' பக்தர்களா? எனவே தான் அந்த 'புத்தரின்' 'அந்த‌' பணத்தில் 'மயங்கி', அவர்கள் நேசமுடன் அந்த 'புத்தருடன்' உறவாடினார்களா, அப்பா - மகள் உறவு முறிந்தது பற்றிய கவலையின்றி; திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களின் 'ஊழல் பாதுகாப்பு செல்வாக்கு வளையம்' மீது உள்ள நம்பிக்கையில் ? (http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

மிகுந்த மதிப்பீடுகளுடனும், சமூக அக்கறையுடனும் இருந்த எனது குடும்பமானது, இப்படிப்பட்ட உறவினர்கள் இருந்ததால் தான்,  'பெரியார் சமூக கிருமியான' அந்த ‘புத்தரால்’, 'இந்த அளவுக்கு' , சீர்குலைக்க முடிந்தது, என்பதும் என் கருத்தாகும்.

'அழுகும் கழகங்கள்'  (சமஸ்; http://tamil.thehindu.com/opinion/columns/) செல்வாக்கில், 'திருச்சி பெரியார் மையம்' மூலம், 'பெரியார் சமூக கிருமிகள்' வளர்ந்தார்களா?'பெரியார் முகமூடியில்', பொதுவாழ்வு 'வியாபாரத்திற்கு', 'முதலில்லா மூலதனமாக' பயன்பட்ட, 'பார்ப்பன எதிர்ப்பு, சாதி ஒழிப்பு' வரிசையில் 'ஊழல் ஒழிப்பு' எப்போது சேர்ந்தது? திருடர்களே திருட்டை ஒழிப்பதாக கூறி, திருடும் 'சமூக செயல்நுட்பம்'(Social Mechanism) ஆனது, தமிழ்நாட்டில் எப்போது 'விதைக்கப்பட்டு', இப்போது 'அறுவடை'யில் உள்ளது? அதில் 'அந்நிய சூழ்ச்சி வலை' எப்போது இணைந்தது?

'ஊழல் வழிகளில்' பணம் சம்பாதிக்க, குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளை சீர்குலைப்பவர்களையும், அவர்களை கண்டிக்காமல் 'நல்லுறவு' பேணுபவர்களையும், 'சமூக கிருமிகளாக' கருதி, எனது சமூக வட்டத்திலிருந்து அகற்றி, நான் வாழ்கிறேன்; 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' சீர்குலைவிற்கு எதிரான போரில், எனது பங்களிப்பாக.

மேற்குறிப்பிட்ட கேள்விகள் அடிப்படையில், தமிழ்நாட்டில் 'பெரியார்' சமூக கிருமிகள் எப்போது? எப்படி? உற்பத்தியானார்கள்? என்ற கேள்விகள் எழுப்பிய உந்துதலில்;

நான் ‘ON GROWTH AND FORM’ (‘வளர்ச்சி மற்றும் வடிவம் பற்றி’ ) BY D'ARCY WENTWORTH THOMPSON’ என்ற புத்தகத்தைப் படித்து, சமூகவியல் நோக்கில் குறிப்புகள் , ஆய்வினைத் தொடங்கினேன். http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html

தத்தம் கொள்கைகளில்/கட்சிகளில், எண்ணற்றோரின் தியாகங்களை எல்லாம், 'பொதுவாழ்வு மூலதனமாக்கிய' சமூக கிருமிகளை, 'சமூக விசாரணை' மூலம், 'சமூக தண்டனைகளுக்குள்ளாக்க' வேண்டாமா? அது இயலாதெனில், அப்படிப்பட்ட கட்சிகள்/கொள்கைகள் நீடிப்பதே, சமூகத்திற்கு கேடாகாதா?

1944இல் தொடங்கிய திராவிட இயக்க வரலாற்றில், நானறிந்த வரையில், எவர் குடும்பத்திலும் நடக்காதது என் குடும்பத்தில் நடந்துள்ளதால், மேற்குறிப்பிட்ட கேள்விகள் பொது அரங்கிற்கு வந்துள்ளன.

குடும்ப உறவுகளிலிருந்து ஒதுங்கி, வாழத் தொடங்கிய பின், நான் திட்டமிடாமலேயே, வணங்கத்தகும் மனிதர்கள் மட்டுமே, எனது சமூக வட்டத்தில் வளர, எனது ஆய்வுகளும், நானே மலைக்கும் அளவுக்கு வளர்ந்து வருகின்றன.

சுயலாப நோக்கின்றி, உள்ளார்ந்த ஈடுபாடுகளுடனும் (Passions), இயற்கையோடும், சமூகத்தோடும் 'ஒட்டி' வாழும் ( http://tamilsdirection.blogspot.in/2016/02/style-definitions-table.html );  எனது சுறுசுறுப்பான, உற்சாகமான வாழ்வினை இன்று அருகில் இருந்து கவனிக்கும் வாய்ப்புள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களும்,  வாழுமிடம், பணியாற்றுமிடம் ஆகிய இடங்களில் என்னை (எனது கடந்த காலம் அறியாத) கவனிப்பவர்களும், வியப்பில் மூழ்குவதும் உண்மையா? பொய்யா? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராயலாம்.

அது போன்ற குடும்ப சீர்குலைவை சந்தித்துள்ள தாமரை, அதனை எப்படி எதிர்கொண்டு வருகிறார்? என்பதையும், இயன்ற அளவு, தெரிந்து வருகிறேன்.                 

( http://tamilsdirection.blogspot.in/2015/03/12.html )

நான் தஞ்சை சரபோசி கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி, 'பெரியார்' இயக்கத்திற்கு 'தீவிரமாக' பங்களித்து, 'விடுதலை' பத்திரிக்கையை தினமும்  இயற்பியல் ஆசிரியர்கள் அறைக்கு (Physics Staff Room), சக பிராமண ஆசிரியர்கள் உள்ளிட்டு அனைவரும் தினமும் படிக்க எடுத்து வந்தவன்; கல்லூரியில் அநீதிகளை எதிர்த்து, பேரா. அ.மார்க்ஸ்  போன்றவர்கள் துணையுடன் போராடியபோது, எனக்கு பிராமண ஆசிரியர்கள் துணையாக முன்வந்தபோது, அதை ஒதுக்காமல் ஏற்றுக் கொண்டவன்; அவர்களில் ஒருவரான, சமஸ்கிருத பேராசியரான, குடுமி, பஞ்சகட்ச உடையே அணியும் ரகுராமனை, சமஸ்கிருத வகுப்பில் மாணவர்கள் குறைவு என்று சொல்லி, தமிழில் முனைவர் பட்டம் பெற்றிருந்த கல்லூரி முதல்வர், அவரை பணி நீக்கம் செய்ய முயன்றபோது, அதை எதிர்த்து போராடி, அவரின் பணியைக் காப்பாற்றினேன்; இன்றுவரை என்னிடம் நன்றியுடன் உள்ளார், திருச்சி பெரியார் மையத்தில் இருந்து பலன் பெற்ற, சுயநல கள்வர்கள்  போன்று நன்றி கெட்டில்லாமல்;

அவ்வாறு , சுயநலக்கள்வர் பண்பின்றி, நேர்மையாக, நான் வாழ்வதால் தான், இந்துத்வா எதிர்ப்பாளர்களும், ஆதரவாளர்களும், பெரியார் இயக்கத்தில் இருந்த காலத்திலும், அதற்குப்பின் இன்றுவரையும், எனது சமூக வட்டத்தில் இருக்கிறார்கள்; சுயலாப நோக்கின்றி, சமூகப்பற்றுடனும், அறிவு நேர்மையுடனும், திறந்த மனதுடனும் உள்ள அவர்களை நான் மிகவும் மதிப்பதாலும்; அது போலவே அவர்கள் என்னை மதிப்பதாலும்.

பாலியல் தேவைகளுக்காக வயதானவர்,  இளம் பெண்ணை திருமணம் செய்வது தொடர்பாக, சமூகத்தில் பொதுவாக நிலவி வந்த வெறுப்பை பயன்படுத்தி, தி.மு.கவினர், தமது பக்கம் இருந்த தவறுகளை மறைத்து, ஈ.வெ.ராவை விட்டு பிரிந்து, இழிவு படுத்தினார்கள்.

அதை உணர்ச்சிபூர்வமாக ஈ.வெ.ரா எதிர்கொண்டதால்;

நிதி உள்ளிட்டவற்றில் நேர்மையற்றவர்களிடமிருந்து, கட்சியையும் சொத்தையும் காப்பாற்ற, அன்றிருந்த இந்து சட்டப்படி ஒரு பெண்ணை ( மணியம்மையை) ஈ.வெ.ரா சட்டப்படி 'வாரிசாக' தத்து எடுக்க முடியாது, 'சட்டபூர்வ திருமணம்' மூலமே வாரிசாக்க முடியும் என்ற உண்மையானது, பொது அரங்கில் எடுபடாமல், தி.மு.கவினர் வெற்றி பெற்று, 1967இல் ஆட்சியைப் பிடிக்க, இன்று தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் சீரழிந்துள்ளது.

எனது இசை ஆய்வுகளின் முலம், பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் செய்த பெருந்தவறை நான் அடையாளம் கண்டேன்.(http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_28.html ) அந்த கண்டுபிடிப்பை 2005 முதல் என்னை சந்தித்த,  தஞ்சை இரத்தினகிரி உள்ளிட்ட 'பெரியார்' கொள்கையாளர்களிடம் தெரிவித்து வந்துள்ளேன். 2006 'தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலரில்' கட்டுரை வெளியிட்டு (http://tamilsdirection.blogspot.in/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html  ), தொடர்ந்து 'இணைய வழியில்', அந்த கண்டுபிடிப்பை விளக்கி, பல கட்டுரைகள் வெளியிட்டு வ்ருகிறேன். அதற்கு ஏதும் அறிவுபூர்வ மறுப்பு வெளியிராத நிலையில், திருச்சி பெரியார் மையத்திற்கு நான் உழைத்ததன் பலனாக, 'தனது கடனுக்காக, பிராமண சார்பாகவும், பா.ஜ.க சார்பாகவும்' மாறிவிட்டதாக, என்னிடம் நேரில் தெரிவித்து விளக்கம் கேட்கும் துணிச்சலின்றி, என்னை இழிவுபடுத்தி,  'கோழைத்தனமாக',  எனது முதுக்குப் பின்னால் பிரச்சாரம் நடந்து வந்துள்ளது. இவையனைத்தையுமே அந்த கண்டுபிடிப்புடன் தொடர்புடைய சமூக சிக்னல்களாக (Social Signals)  கருதி, எனது சமூகவியல் ஆய்வில், நான் பயணிக்கிறேன்;  'இழிவுக்கு இலக்கணமாக' வாழ்பவர்களை, 'திருச்சி பெரியார் மையம்' மூலம் அடையாளம் கண்டு; 'பெரியார் முகமூடியுடன்' எவ்வாறு ஏமாற்றி வாழ்கிறார்கள்? என்ற சமூக செயல்நுட்பம் (Social Technique)  பற்றிய ஆய்வுடன்.

ஈ.வெ.ராவை இழிவு செய்து தி.மு.க மேற்கொண்ட பரப்புரையானது, அன்றைய பொது அரங்கில் வெற்றி பெற்றது போல,  "தன்னுடைய  கடனுக்காக  பிராமணசார்பு, பாஜக  சார்பாக  மாறிவிட்டார் " என்ற என்னைப் பற்றிய‌ வதந்தியை , ஒருதலைபட்சமாக ஏற்று கொள்ளும் 'பெரியார்' கொள்கையாளர்கள்;

ஒன்று;  ஈ.வெ.ராவை தவறாக நினைத்த பொதுமக்கள் போன்று,  'விபரமற்றவர்களாக' இருக்க வேண்டும்;

அல்லது;  அகத்தில் சீரழிந்தவர்களாக,  'பெரியார் கொள்கை' வேடத்தில் இருக்க வேண்டும்.

ஆனால், தி.மு.கவை வீழ்த்த,  ஈ.வெ.ரா மேற்கொண்ட உணர்ச்சிகர அணுகுமுறையை,  நான் மேற்கொள்ள மாட்டேன். மாறாக,  அதை அரிய சமூகவியல் சிக்னலாக (Sociological signal)  கருதி, அறிவுபூர்வமாக,  தமிழ், தமிழர், தமிழ்நாடு மீட்சிக்கான எனது முயற்சிகளுடன் 'ஒருங்கிணைத்து' செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்; ஈ.வெ.ரா தோற்ற இடத்தில், தமிழர்களிடையே 'நாய்களும், கழுதைகளும்' சிறுமமாகி, தன்மானமும், அறிவும் ஊக்கம் பெறும் இலக்கில், நான் வெற்றி பெறுவேன் என்ற தன்னம்பிக்கையுடன்; திறந்த மனதுடனும், அறிவுநேர்மையுடனும், 'காலதேச வர்த்தமான' மாற்றங்களுக்கு, ஈ.வெ.ராவின் கொள்கைகளை உட்படுத்தி, ஈ.வெ.ராவை 'மீட்கும்' முயற்சியில்; சுயலாப கள்வர் நோயில் சிக்காத, அவரின் ஆதரவாளர்களை ஒன்றிணைத்து.

பொதுவாக இது போன்ற 'சுயநல கள்வர்'களிடமிருந்து, தம்மையும், தமது குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள உருவான, 'சமூக பாதுகாப்பு கவசமாக', 'குலம், கோத்திரம்' போன்றவை, காலனிய வருகைக்கு முன், தமிழ்நாட்டில் செயல்பட்டதா?

காலனியம் அறிமுகப்படுத்திய ( எனது ஆய்வுகளின்படி) 'சமூக உயர்வு, தாழ்வு, தீண்டாமை நோயில்', அந்த சமூக பாதுகாப்பு கவசமானது சிக்கி, வெறுக்கத்தக்கதாக 'முற்போக்காளர்கள்' அரங்கில் 'உருமாறி', அதில் நான் பலியாகியுள்ளேனா?

மேற்குறிப்பிட்ட கேள்விகள் அடிப்படையில், தமிழ்நாட்டில் 'பெரியார்' முகமூடி சமூக கிருமிகள் எப்போது? எப்படி? உற்பத்தியானார்கள்? என்ற கேள்விகள் எழுப்பிய உந்துதலில்;
நான் ‘ON GROWTH AND FORM’ (‘வளர்ச்சி மற்றும் வடிவம் பற்றி’ ) BY D'ARCY WENTWORTH THOMPSON’ என்ற புத்தகத்தைப் படித்து, சமூகவியல் நோக்கில் குறிப்புகள் , ஆய்வினைத் தொடங்கினேன்.

ஆன்டன் பாலசிங்கத்திற்கு நெருக்கமாக இருந்தவர்; விடுதலைப்புலிகளை விமர்சிக்காமல் 'அட்ஜஸ்ட்'-'adjust'- பண்ணியிருந்தால், எவ்வளவு வசதியாக உயர்வான வாழ்க்கை வாழ்ந்திருப்பார்?  எனது மனைவி தொடர்பான, குடும்பச் சொத்துக்கள் சம்பந்தமான‌ வழக்குகளுக்கு உதவ, தி.க தலைவர் திரு.கி.வீரமணி தாமாகவே முன்வந்த போது, அதை ஏற்று, தி.க தலைவர் வீரமணியை 'அட்ஜஸ்ட்' பண்ணியிருந்தால், எவ்வளவு வசதியாக உயர்வான வாழ்க்கை வாழ்ந்திருப்பார்? பிழைக்கத் தெரியாதவர்; என்றெல்லாம், எனது முதுகுக்குப் பின்னால் பேசியதையும்,  நான் அறிவேன்.

அறிவுபூர்வ வெளிச்சத்தில், வெளிப்படையான(Transparency) , தவறுகளுக்கு பொறுப்பேற்கக் கூடிய வகையில்(Accountability),  தமிழ்நாட்டின் பொது அரங்கு, 1944க்கு முன் இருந்ததால், காங்கிரசானாலும், நீதிக்கட்சியானாலும், கம்யூனிஸ்டானாலும் நேர்மையான தலைவர்களே பெரும்பாலானவர்களாக இருந்தார்கள். 1944 முதல், உணர்ச்சிபூர்வ இருட்டு வளர்ந்து, அந்த போக்கை சிதைத்ததால், ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகாத தலைவர்கள் அரிதாகி விட்டார்கள். என்னைப் போன்றவர்கள் 'பிழைக்கத் தெரியாதவராகவும்', 'ஒற்றராகவும்', , "தன்னுடைய  கடனுக்காக  பிராமணசார்பு, பாஜக  சார்பாக  மாறிவிட்டார் " என்பதாகவும் , பரப்புரை பரவ; ஊழல் ஒழிப்பு ஒழுங்காக செயல்பட்டால், சிறை செல்ல வேண்டியவர்கள் எல்லாம், சட்டத்தின் பிடியில் சிக்காத, 'வாழ்வியல் புத்திசாலிகளாக', 'முன்மாதிரிகளாக', 'பெரியார் கொள்கையாளர்' என்ற முகமூடியுடன்,  வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

1967க்கு முன், சொந்த கிராமத்திற்கு வராமல், தலைமறைவாக,
(சமூக பார்வையில்) வைப்பாட்டி/ அல்லது இரண்டாவது மனைவி - யுடனும், அந்த தொடர்பில் பிறந்த மகனுடனும், பண நெருக்கடியில்  என் மாமனார் வாழ்ந்து வந்த நிலையில், (அவரின் நண்பரான பள்ளி ஆசிரியர் முத்துசாமி, 1967-இல் அமைச்சரானபின், சமூகத்தில் என் மாமனார் வி.ஐ.பி(VIP)  ஆக,)  அந்த கிராமத்து 'பெரியவரான' தாத்தாவின் ஆதரவில் வளர்ந்த பேத்தியை, என் மாமனாரின் சட்ட பூர்வ ஒரே மகளை நான் மணந்து, 1967க்குப்பின் 'ஊழல்' வளர்ந்த வேகத்தில், எனது மாமனார் 'செல்வாக்கில்' வளர்ந்து, குடும்பச் சொத்தில் சட்டபூர்வ உரிமை கோரிய, தனது சட்டபூர்வ மனைவி மற்றும் மகள் மீதும், அவர்களை ஆதரித்த என் மீதும், அவரை தாக்கியதாக பொய் வழக்குகள் தொடுத்த போதும், அந்த வழக்குகளிலிருந்து தப்பிக்க, எனது 'நேர்மை' இயல்பிலிருந்து விலகாததாலும், 'சோரம்' போகாமல் வாழ்ந்து வருவதாலும், அதில் 'பெரியார்' இயக்கத்தில் நுழைந்ததால், எனது குடும்ப வாழ்க்கையில் சந்தித்த அனுபவ‌ங்களும், எனது 'சுயசரிதை' எழுதினால், திராவிட இயக்கத்தால், தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் ஏற்பட்ட பாதகங்களின் சமூக செயல்நுட்பத்தை விளங்கிக் கொள்ள, அது துணை புரியும். அந்த எண்ணமும் உள்ளது.

எனக்கு தெரியாமலும், எனக்கு சம்பந்தமில்லாமலும், என்னைப்ப‌ற்றி பரப்பப்பட்டு வந்த/வரும் வதந்திகள் பற்றியும், 'பாமா விஜயம்' திரைப்படம் போல, ஒரு நகைச்சுவை திரைக்கதை உருவாக்கும் எண்ணமும் வந்துள்ளது.

தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் எண்ணிக்கையிலும், பணபலத்திலும், தமிழ்நாட்டு சமூக அங்கீகாரத்திலும், குறைந்த நிலையில் இருந்த போது,  காலூன்றி நடக்க, 'துணை' புரிந்த வெகுசிலரில் ஒருவரான நான்;(http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html )

சுயலாப நோக்கில், மனசாட்சியை அடகு வைத்து, 'விமர்சனமின்றி' பயணித்திருந்தால், 1980களுக்குப்பின், தமிழ்நாட்டில் 'உருவான' 'புதுப் பணக்காரர்களில்' முதல் வரிசையில் இடம் பெற்றிருக்கலாம்:

ஆனால் 'விடுதலைப் புலிகள் மீண்டும் ஏமாறப் போகிறார்களா?'(1988), 'ராஜீவ் கொலையும், சதிகளும்' போன்ற இன்னும் பல‌ நூல்கள் வெளிவந்திருக்காது; ராஜிவ் கொலை தொடர்பான, ஜெயின் கமிசன் விசாரணையில் சமர்பிக்க, அப்புத்தகத்தில் வெளிவந்த பத்திரிக்கை சான்றுகளின் ஒளி நகல்களை(Xerox) , "ஆசிரியர் கேட்டார்' என்று, தி.க பொருளாளர் கா.மா.குப்புசாமியின் மகனும், 'தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி கேட்டார்' என்று, தஞ்சாவூர் இரத்தினகிரியும் என் வீடு தேடி வ்ந்து, வாங்கி சென்றதும் நடந்திருக்காது; 

நான் அதிர்ச்சி அடையும் வகையில் , 'வறுமைமிகு' தோற்றத்தில்,  அற்புதம் அம்மாள், எனது முன்னாள் மாணவருடன், சென்னையில் எனது வீட்டிற்கு வந்து, பேரறிவாளன் குடியரசு தலைவருக்கு அனுப்ப எழுதிய, 100 பக்கங்களுக்கும் அதிகமான கருணமனுவை, தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க தனக்கு 'வசதியில்லை; உதவ யாருமில்லை' என்று சொன்னவுடன், எனது ஆய்வுகளை நிறுத்தி, அதை உடனே மொழிபெயர்த்து, கொடுத்ததும் நடந்திருக்காது; 

'கி.வீரமணியின் ஒற்றர்' என்று என் மீது வதந்தி பரப்பப்படும் அளவுக்கு, திரு.கி.வீரமணியிடம் எனக்கு 'செல்வாக்கு' கிடைத்திருக்காது; அந்த 'செல்வாக்கையும்'  சுயநலநோக்கில் பயன்படுத்தியிருந்தால், அவரை விட்டு பிரிந்தது நடந்திருக்காது;

இன்று பிரதமர் மோடிக்கு நெருக்கமான புலமையாளர்களிடம், அது போன்ற 'செல்வாக்கு' கிடைத்திருக்காது; ஈ.வெ.ராவை அதே விமர்சனப் பார்வைக்கு உட்படுத்தியிருந்தாலும், அவரின் வெற்றி, தோல்விகளிலிருந்து பாடங்கள் கற்று பயணிக்கும் எனக்கு,  'ஈ.வெ.ராவே முன்மாதிரி' என்று, அவர்களிடம் சொல்லும் துணிச்சலும் வந்திருக்காது;

எனது பதிவுகளை அவர்கள் தமது சமூக வட்டத்தில், ஆர்வமுடன் படித்து விவாதிப்பதும் நடந்திருக்காது; இன்று தமிழ்நாட்டில் தமிழ்வழிக்கல்வி மீட்பு மையம், மற்றும் எனது புத்தக வெளியீடு போன்றவற்றிற்கு, ஒரே மேடையில் 'பெரியார்' இயக்க தலைவர்களையும், ஆர்.எஸ்.எஸ் தலைவர்களையும் அழைக்க திட்டமிடும் துணிச்சலும், எண்ணமும் வந்திருக்காது.


குறிப்பு:

இன்று ஈ.வெ.ரா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துடன் சேர்ந்து செயல்பட்டிருப்பாரா? என்று நான் கருதுவதற்கான காரணங்களை ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_29.html) 

ஆர்.எஸ்.எஸைப் போல, ஈ.வெ.ரா வலியுறுத்திய 'காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு' உள்ளாகாமல், பெரியார் கட்சிகள் பயணிக்கின்றனவா? என்ற கேள்வியை, 1971 சேலம் தி.க ஊர்வலம் தொடர்பான ரஜினியின் கருத்திற்கான எதிர்ப்புகள் எழுப்பியுள்ளன. (https://tamilsdirection.blogspot.com/2020/01/normal-0-false-false-false-en-us-x-none.html & https://tamilsdirection.blogspot.com/2020/01/normal-0-false-false-false-en-us-x-none_27.html)
 

No comments:

Post a Comment