Monday, November 2, 2015



இடையிடு 8: Interlude 8:

எனது கண்டுபிடிப்புகளின் வெற்றியின் இரகசியம் (1)

                             
பாரதி நூற்றாண்டு விழாக்கள் தொடங்கும் முன், 'பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே' என்ற நூலை வெளியிட்டேன். அந்த காலக்கட்டத்தில், எனது மிகவும் நெருங்கிய நண்பர் பேரா.அ.மார்க்ஸ், அப்புத்தகத்தைக் கண்டித்து, புத்தகங்களும், கட்டுரைகளும் வெளியிட்டார்.

தஞ்சையில் ராமநாதன் செட்டியார் மன்றத்தில், 'கலை இலக்கிய பெருமன்றம்' கூட்டத்தில் அவர் பேச்சாளர்; நான் பார்வையாளர். 'குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுபவராக', அந்த நூலாசிரியரை குறை கூறினார். எங்கள் நட்பில் சிறுவிரிசலை கூட, அந்த கருத்து வேறுபாடு ஏற்படுத்தவில்லை. 

எனது நிலைப்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாடுகளுடன், சுயநல நோக்கின்றி, உண்மையான அர்ப்பணிப்புடனும், தியாகத்துடனும், வாழ்பவர்களை நான் மிகவும் மதிக்கிறேன்; நட்பும் பாராட்டுகிறேன் வாய்ப்பு கிடைத்தால். பணம் ஈட்ட, 'சமூகக் கிருமிகளாக' (திருக்குறள், பொருள்;அதிகாரம்:92) வாழ்பவர்களை (குடும்பம், சுற்றம், நட்பு உள்ளிட்டு), என்னை பாராட்டுபவர்களாயிருந்தாலும், ஒதுக்கி வாழ்கிறேன். மேற்கத்திய இந்துத்வா எதிர்ப்பு 'அறிவுஜீவி'களுடன், அறிவுபூர்வ விவாதங்கள் மூலம், 'வெற்றிகள்' ஈட்டி வரும், அமெரிக்காவில் வாழும் திரு.ராஜிவ் மல்கோத்ராவின் கீழ்வரும் கருத்தையும், என் வாழ்வில் பின்பற்றுகிறேன். 

“ எனது ஆய்வுகளை, நமது ஆதரவாளர்கள் படித்து,விளங்கி,விவாதித்து, எதிர்வினையாற்ற வைப்பது என்பது எனக்குள்ள மிகப்பெரும் சவாலாகும்.அவர்களில் 99% உணர்ச்சிபூர்வ மடையர்களாக இருப்பார்கள் என கருதுகிறேன். ஒரு மூடனான பின்பற்றுபவரை விட, புத்திசாலி எதிரி மதிக்கத்தக்கவராவார்.”
" My biggest challenge will be getting our own folks to read, understand, discuss, respond. I expect 99% will be morons, but brag emotionally. AN INTELLIGENT OPPONENT IS MORE WORTHY THAN A STUPID FOLLOWER." - RajivMalhotraDiscussion] My next book (on the battle between Sanskrit tradition and Western scholars ; http://rajivmalhotra.com/)

அந்த காலக்கட்டதில், பெரியார் எதிர்ப்பாளராக இருந்த பேரா.அ.மார்க்ஸ், என்னிடம் பெரியாரையும், அவர் கொள்கைகளையும் எதிர்த்து, கேள்விகள் பல கேட்டார். அதற்கு 'திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும்' நான் தொடங்கிய தேடலே, பின்னர் என்னை ஒரு புலமையாளராக, (theoritician) வளர்த்துக்கொள்ள உதவியது. 


பேரா.அ.மார்க்ஸ் மிகுந்த நகைச்சுவை உணர்வு உள்ளவர்; நீண்ட இடைவெளி; இப்போது எப்படி என்று எனக்கு  தெரியாது. 'விடுதலை' ஆசிரியர் திரு.கி.வீரமணி அவர்களை, இந்த காலக்கட்டத்தில், 'ஆசிரியர்' என்று பேரா.அ.மார்க்ஸ் எழுதி வருவதானது, எனக்கு நம்பமுடியாத நகைச்சுவையாகும்.
http://tamilsdirection.blogspot.com/2015/04/2.html
("ஈ.வெ.ரா, கி.வீரமணி, மு.கருணாநிதி என்று நமது பேச்சில், எழுத்தில் குறிப்பிட்டால், அவர்களை அப்பெயர்கள் மூலம் நாம் அவமதிக்கிறோமோ? என்று நமக்கு ஐயம் வரும் வகையில், அவர்கள் ஆதரவாளர்கள் நினைப்பது உண்மையா? பொய்யா? என்பதும் ஆய்விற்குரியதாகும். மதிப்பதற்கும் வழிபடுவதற்கும் இடையில் உள்ள வேறுபாடு, தமிழ்நாட்டில் மறைந்து விட்டதா? சினிமா ரசிகர்கள் நடிகர்களையும், தொண்டர்கள் தலைவர்களையும், கடவுளர்களாக 'வழிபடுவது', அதன் விளைவா? இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே இந்த போக்கு தமிழ்நாட்டில் மட்டும் தான் இருக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்."(குறிப்பு 2 கீழே)
http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.html    )
  
அந்த காலக்கட்டத்தில், சென்னை பெரியார் திடலில் தங்கியிருந்தபோது, அங்கு பணியாற்றிய ஆளவந்தாருடன் உரையாடும் வாய்ப்பு கிட்டியது. 'ஒரு விஷயத்தை ஆராயும்போது, அந்த ஆராய்ச்சி போக்கில், நமது நிலைப்பாடுகளுக்கு அல்லது நமக்கு, என்ன பாதிப்பு? என்ற குறுக்கீடு வந்தால், அது கெட்டுவிடும்' என்று ஒரு உரையாடலில் பெரியார் தெளிவுபடுத்தினாராம். முந்தைய பதிவில் குறிப்பிட்டபடி, இழிவான எண்ணங்களின் மூலமாகிய, 'ஒப்பீடு நோய்' (comparison disease)  என்பதானது, 'உடமையுணர்வு' (possessive) என்னும் 'பாதுகாப்பின்மை'யில் (insecurity) சிக்குவதற்கு வழியாகும். அந்த வழியில், நமது மூளையின் செயல்பாடானது (processing),   மேற்குறிப்பிட்ட  'குறுக்கீடு' நோயில் சிக்க வைத்து, ஆய்வினை சிதைத்து விடும். அதுவே நமது இயல்பாகும்போது, நாமும் சிற்றினமாகவும், 'சமூகக் கிருமி'களாகவும், சீரழிவதை, தடுக்கவும் முடியாது. அதன்பின் ஊழல், கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சமூக குற்றங்களை கண்டிக்க, நமக்கு அருகதை  உண்டா, நாமும், நமது குடும்பமும், நண்பர்களும், 'பலி'யானாலும் கூட?

அந்த புரிதலோடு, நான் மேற்கொண்ட இசை ஆராய்ச்சி உள்ளிட்ட ஆராய்ச்சிகளிலும்
, எனது கண்டுபிடிப்புகளின் வெற்றியின் இரகசியமும், அதுவேயாகும்.

 (http://musicdrvee.blogspot.com/ ;http://musictholkappiam.blogspot.com/ , http://drvee.in/ )

எனவே எனது ஆராய்ச்சிகளின் பலன்களான‌ பதிவுகளில், எவரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. மேற்குறிப்பிட்ட புத்தகத்தை அ.மார்க்ஸ் கண்டித்தது போல, எனது பதிவுகளையும், கண்டித்து எழுதுவதை வரவேற்கிறேன். அவை நிச்சயமாக, என்னை மேலும் நெறிப்படுத்திக் கொள்ள உதவும்; 'சமூகக் கிருமிகளின்' பிடியிலிருந்து, தமிழ், தமிழர், தமிழ்நாடு மீள்வதற்கு, பங்களிப்பு வழங்குவதற்காக. அதே நோக்கில், கொள்கையில் எதிரெதிர் முகாம்களில் உள்ள கல்லூரி மாணவர்களிடையிலும், அரசியல் நீக்கத்திற்குள்ளான (depoliticized)  மாணவர்களிடையிலும்,  (கணினி இசைப்பயிற்சி மூலம் ஈர்த்து‍- குறிப்பு 1) கலந்துரையாடவும் எண்ணியுள்ளேன்.
(http://tamilsdirection.blogspot.com/2015_06_01_archive.html)

குறிப்பு 1 : இசைப்பயிற்சியற்ற‌ கல்லூரி மாணவர்களை, ஒரு வாரத்தில்(2hr/day), மேற்கத்திய இசை, கர்நாடக இசை குறியீடுகளை புரிந்து, கணினி வழி இசையமைப்பாளராக்க முடியும் என்பது, சாஸ்திரா பல்கலைக்கழக, திருச்சி என்.ஐ.டி(NIT-T), வகுப்புகள் (இந்தியாவில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட‌ Music Information Technology-MIT) மூலம் வெளிப்பட்டதானது, எனக்கே நம்ப முடியாத அதிசயமாகும்.

குறிப்பு 2 :தமிழ்நாட்டில் பொது அரங்கில் எந்த காலம் வரை 'ஈ.வெ.ராமசாமி நாயக்கர்' இருந்தது? எப்போது அது 'ஈ.வெ.ராமசாமி'யாக சுருங்கியது? எப்போது 'தோழர் ஈ.வெ.ராமசாமி'யாக மாறியது? எப்போது வழங்கப்பட்ட 'பெரியார்' பட்டம், எந்த காலக்ட்டத்தில் 'ஈ.வெ.ராமசாமி'யோடு 'நிலையாக' ஒட்டியது? பின் எந்த காலக்கட்டத்தில் 'ஈ.வெ.ராமசாமி' விலகி, 'தந்தை பெரியார்' நிலையானது? " 'ராமரை' எதிர்த்துக் கொண்டு, 'ராமசாமி' என்று பெயர் இருப்பது சரியா?" என்ற கேள்விக்கு, " அது பெற்றோர் இட்ட பெயர். 'மயிர்'(hair) என்று நீ என்னை கூப்பிட்டாலும், ஆட்சேபணையில்லை" என்று சொன்ன அணுகுமுறையிலிருந்து 'சிதைந்து', அந்த பெயர், இன்று 'தந்தை பெரியார்' ஆனதா?  என்பது போன்ற கேள்விகளுக்கான விடைகளுக்கும், தமிழர்களின் 'அடையாளச் சிதைவு' மற்றும் 'அரசியல் நீக்கம்' போக்குகளுக்கும், தொடர்புகள் உண்டா? என்பது போன்ற ஆய்வுகள், அவரின் வரலாற்று மரணப்போக்கை தடுத்து நிறுத்தி, தமிழின், தமிழரின் மீட்சி போக்குகளுக்கு துணை புரியும், என்பதும் என் கருத்தாகும். 
(https://tamilsdirection.blogspot.com/2015/05/normal-0-false-false-false-en-us-x-none_15.html

பாதுகாக்கப்பட வேண்டியது; ஈ.வெ.ராவின் திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும் கேள்விகள் கேட்கும் ஆராய்ச்சியே; 'உணர்ச்சிபூர்வ' எதிர்ப்புகளை, 'அறிவுபூர்வமாக' சந்தித்த அணுகுமுறைகளே;   'காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு' உட்படுத்தாத அவரது கொள்கைகளையல்ல; மேலுள்ள பதிவின்படி, 'பெரியார்' மூலம், 'சமூக கிருமி'களாக, 'வளர்ந்து'ள்ளவர்களையுமல்ல‌.

சமூகத்தின் ஆணி வேர்களாகிய, தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு ஆகியவையே, சமூக வளர்ச்சிக்கான  ஆற்றல்களின் ஊற்றுக்கண்கள். அவை வற‌ண்டு வரும் போக்கானது, 'வறட்சி சுனாமி'யாக மாறுவதற்கு முன் தடுக்கப்படாமல், தமிழும், தமிழரும் மீள முடியாது. அது எனது வீண் பயமாக/கற்பனையாக, இருந்தால் மகிழ்ச்சியே. இல்லையென்றால், 'பெரியார்' மூலம் உருவான‌ 'சமூக கிருமி'களின் பங்களிப்பால், வரலாற்றில் ஈ.வெ.ரா குற்றவாளியாகவே,  அவரின் சுயநலம் பாரா உழைப்பும், தியாகமும் பயன்பட்டதாக, கருதப்படாதா?  

ஈ.வெ.ரா என்ற செயலாற்றியின்(processor) திறனை மேம்படுத்தி, கால ஓட்ட வழக்கொழிந்த(outdated)  'கொள்கைகள்' என்ற 'ஹார்ட் டிஸ்க்'(Hard  Disc) பாகத்தை புதுப்பித்து, பயன்படுத்துவது தாமதமானால், அந்த மதிக்கத்தக்க சமூக கணினி, தனது வாழ்வை முடித்து, 'சமூக  அருங்காட்சியகத்திற்கு' போவதை தடுக்க முடியுமா, கால ஓட்டத்தில்?

No comments:

Post a Comment