Tuesday, December 9, 2014



    தமிழின்  அடுத்த கட்ட(Next Phase) புலமை? (1)


உலக அளவில், அறிவியல், தொழில்நுட்பம், உள்ளிட்ட துறைகளில் தமிழ் இளைஞர்கள் பலர் 'சாதனையாளர்களாக' வளர்ந்து வருகிறார்கள்.தமிழ்நாட்டில் உள்ளவர்களை விட, வெளிநாட்டில் உள்ள தமிழர்களுக்கு,  மற்ற மொழியினர் தமது அடையாளத்தையும், மொழியையும் 'விட்டுக் கொடுக்காமல்' நேசித்து வாழ்வதைப் பார்க்கும் அனுபவங்கள் அதிகம் உள்ளன.எனவே அவர்களில் சிலர் தத்தம் திறமைகளைக் கொண்டு, வியாபார நோக்கமில்லாமல் மேற்கொண்டுவரும் முயற்சிகள் ஆனது,  தமிழ் கணினிமயமாகும் போக்கிற்கு மிகவும் துணை புரிந்து வருகின்றன.

ஒருவர் எழுதும் தமிழில் உள்ள இலக்கணப்பிழைகளைச் சுட்டிக் காட்டி திருத்தும் மென்பொருளும்(software), தொல்காப்பியம் தொடங்கி, தமிழில் உள்ள இலக்கியங்களில் விரும்பும் பகுதிகளையும், அவற்றிற்கான உரைகளையும், ஆய்வு விளக்கங்களையும் சில நொடிகளில் தேடித்தரும் மென்பொருளும் (software), தமிழில் பரவலாகப் பயன்படுத்தப்படும் காலம் அதிக தொலைவில் இல்லை. அதன் காரணமாக அத்தகைய 'புலமை'யானது இனி அவசியமற்றதாகிவிடும். உலக அளவில் தமிழ் உள்ளிட்டு கணினிமயத்திற்குள்ளான மொழிகளின் அடுத்த கட்ட புலமையானது, அந்தந்த மொழிகளின் தனித்தன்மைகளுக்கு ஏற்ற வகையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது தொடர்பான 'சிக்னல்'களும் (signals) வெளிப்படத் தொடங்கியுள்ளன.
 
சென்னை மத்திய தோலாய்வு நிறுவனத்தில் (Central Leather Research Institute) விஞ்ஞானியாகப் பணியாற்றிய முனைவர் என், சோமநாதன் தனது தமிழார்வத்தால் இரண்டாவது முனைவர் பட்ட ஆய்வினைச் சுமார் 20 வருடங்களுக்கு முன் சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் மேற்கொண்டார். அதில் பழந்தமிழ் இலக்கியங்களில் தோல் பதனிடும் தொழில் நுட்பம், தோல் இசைக் கருவிகள் பற்றிய தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளார். (http://nsomanathan.tripod.com/) அந்த ஆய்வின் நகல் அங்குள்ள நூலகத்தில் உள்ளது. அரசியல் 'செல்வாக்குள்ள' தமிழ் அறிஞர்கள்' 'பிடியில்' தமிழ்நாடு சிக்கியதால், இத்தகைய ஆய்வுகள் நூலாக வெளிவரவில்லை. எனவே அந்த ஆய்வின் அடிப்படையில் உயிர் இணக்க (Bio-friendly) தோல் தொழில்நுட்ப/தோல் இசைக் கருவிகள் பற்றிய‌ ஆய்வுகள், அதன் தொடர்ச்சியாக‌  'இயல்பாக' மேற்கொள்ளப்படும் சந்தைப்படுத்தும் பொருள் உருவாக்க‌ (marketable product development) முயற்சிகளும்,  இன்று வரை தமிழ்நாட்டில் நடைபெறவில்லை.

அடுத்து சென்னை கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி முனைவர்.சீனிவாசன் 'தமிழ் மொழியின் கட்டமைப்பு பண்பு உறவுகளை ஆய்வு செய்தல் : ஒரு தகவல் கோட்பாடு அணுகுமுறை ' (The Study of Structure - Property Relationships of Tamil: An Information Theory Approach ) என்ற தலைப்பில் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பல வருடங்களுக்கு முன் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளர்.

தகவல் கோட்பாடு (Information Theory ), ஹப்மென் கோடிங் அல்காரிதம் ( Huffman Coding Algorithm),மார்க்கோவ் சங்கிலி (Markov chain), தரவு அமுக்கம் (data compression ) உள்ளிட்ட பல அறிவியல் தொழில்நுட்பக் கோட்பாடுகள் அடிப்படையில் பழந்தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து, தமிழைப் பற்றிய வியப்பூட்டும் அரிய தகவல்களை வெளியிட்டுள்ளார். தமிழில் புலமை தொடர்பான அடுத்த கட்ட ஆய்வுகள் நவீன‌ அறிவியல் தொழில்நுட்பக் கோட்பாடுகள் அடிப்படையில் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதற்கு இந்த ஆய்வு ஒரு வழிகாட்டியாக அமைந்துள்ளது. அரசியல் 'செல்வாக்குள்ள' தமிழ் அறிஞர்கள்' 'பிடியில்' தமிழ்நாடு சிக்கியதால், இந்த ஆய்வும் நூலாக இதுவரை வெளிவரவில்லை. அரசியல் 'செல்வாக்குள்ள' தமிழ் அறிஞர்கள்' சமூக வட்ட தொடர்பைத் தவிர்த்து, தனிப்பட்ட முறையில் இது போன்ற ஆய்வுகளை தமிழ்நாட்டில் புத்தகமாக வெளியிடுவதில் உள்ள 'சிரமங்கள்' பற்றிய எனது 'அனுபவங்களை' வாய்ப்பு அமையும்போது வெளியிட எண்ணியுள்ளேன்.

அடுத்து பழந்தமிழ் இலக்கியங்களில் மேற்கொள்ளப்படும் பல்துறை ஆய்வுகள் உலகப் பல்கலைக்கழகங்களில் நிதி உதவியுடன் கூடிய ஆய்வுத் திட்டங்களை (funded research projects)  மேற்கொள்வதற்கும், சந்தைப்படுத்தக்குடிய பயன்பாட்டு மென்பொருட்கள் (marketable application software) உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவதற்கும்,  வழிகோலும் எனது ஆய்வுகளில் ஒன்று பற்றி மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.

உலகப் பல்கலைக்கழகங்களில் 'இசை மொழியியல்' (Musical Linguistics) என்ற புதிய துறையை விரைவில் உருவாக்கவல்ல கண்டுபிடிப்புகள் தொல்காப்பியத்திலிருந்து வெளிப்படத் தொடங்கியுள்ளன. http://musictholkappiam.blogspot.in/ உலக அளவில் நிபுணர்களின் கவனத்தை இந்த துறை ஈர்க்கத் தொடங்கியுள்ளது. (http://tamilsdirection.blogspot.com/2018/09/2-musical-linguistics-nlp-earlybirds.html).

அந்த துறையானது உலகில் அசை சார்பு மொழிகளில் (Syllabic languages) இசையும் மொழியும் சம்பந்தப்பட்ட சந்தைப்படுத்தக்கூடிய மென்பொருட்கள்(marketable application software)  பலவற்றை உருவாக்கவல்ல துறையாகும். அத்தகைய மென்பொருட்களை எந்த மொழியிலும் உருவாக்க முனைபவர்கள்,  வலுவான அடித்தள அறிவைப்பெற வேண்டுமானால், தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கண இலக்கிய‌  நூல்கள் மீது ஆய்வுப் படையெடுப்பு நடத்தியாக வேண்டும். 

சமஸ்கிருத இலக்கண நூலான பாணினியின் 'அஷ்டதாயி'(Aṣṭādhyāyī of Pāṇini,) தொடர்புடைய 'மகாசிவ சூத்திரங்கள்,சமஸ்கிருததில் உள்ள எழுத்துக்களின் ஒலி அமைப்பைப் பாடலாக வெளிப்படுத்துவதாகும்.( http://en.wikipedia.org/wiki/Shiva_Sutras) தொல்காப்பியத்தில் வெளிப்பட்டுள்ள இசை மொழியியல்(Musical Linguistics) அடிப்படையில், அப்பாடல் அமைந்திருக்கக் கூடிய வாய்ப்பு எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ளது. எனவே தொல்காப்பியத்தில் தொடங்கிய அந்த ஆய்வுப் படையெடுப்பானது,சமஸ்கிருதம், தெலுங்கு,கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் உள்ள தொன்மை இலக்கியங்களை நோக்கி விரிவடையவும் வாய்ப்புள்ளது.  காலனியம் தூண்டிய 'உயர்வு, தாழ்வு'நோயில் சிக்கிய பிரிவினை சூழ்ச்சிகளை ( இசையில் ' தீண்டாமை காலனியத்தின் ‘நன்கொடை’யா?; 
http://tamilsdirection.blogspot.in/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html ),  இத்தகைய ஆய்வுப் படையெடுப்புகள் முறியடித்து, வேற்றுமையில் ஒற்றுமையை நோக்கியப் பயணத்தை வலுவாக்கவும் வாய்ப்புள்ளது.

மேற்குறிப்பிட்டவை போன்ற பல்துறை ஆய்வுகளே தமிழின் அடுத்த கட்ட புலமையின் வளர்ச்சி திசை என்பது தெளிவாகத் தொடங்கி விட்டது. அந்த அடுத்த கட்ட தமிழ்ப் புலமையை வளர்ப்பதில்- ‘திராவிட‌ அரசியல் செல்வாக்குள்ள' ‘தமிழ் அறிஞர்கள்' 'பிடி'யில் தமிழ்நாடு சிக்கியதன் காரணமாக, - தமிழ்நாட்டுத் தமிழர்கள் பின்தங்கினாலும்,உலகில் புதிய பயன்பாட்டு தொழில் நுட்ப முயற்சிகளில்(New technology application products)  ஈடுபடும் வெளிநாட்டினர், தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் புதைந்துள்ள தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்து, சந்தையில்(market)பெறும் வெற்றிகள் மூலம்,திராவிட மனநோயாளித்தனப் பாதிப்புகளிலிருந்து 'விடுபட்டு', தமிழ்நாட்டுத் தமிழர்கள் விழித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.அந்தப் போக்கில், தற்போது 'செல்வாக்குடன்' வலம் வரும் 'திராவிட மனநோயாளிக் கள்வர்கள்' 'சருகாகி' உதிர்ந்து, தமிழ்நாட்டின் அகவாழ்வும், புற வாழ்வும்,அந்நோயிலிருந்து விடுபடவும் வாய்ப்பிருக்கிறது.

அதே போல் தமிழின் அடுத்த கட்ட புலமையானது, தமிழரின் வாழ்வு முன்னேற்றத்துடன் தொடர்புடைய திசையில் பயணித்தாக வேண்டும். முன்னேற்றம் என்பது புறத்தில் வசதி வாய்ப்புகளைப் பெருக்குவதாகவும், வாழ்வில் சந்திக்கும் அகம் சம்பந்தப்பட்ட சிக்கல்களை நல்ல முறையில் சந்தித்து ஆக்கபூர்வமாக வாழ துணை புரிவதாகவும் இருக்க வேண்டும். தமிழர்களின் வாழ்வில் அகம், புறம் ஆகிய இரண்டு புலங்களிலும் பலன் தரக்கூடிய வகையில், தமிழின் அடுத்த கட்ட புலமை வளர்ச்சியானது பயணித்தாக வேண்டும்.தமிழரின் தர அடையாளத்தை (benchmark) உயர்த்தவும் அதுவே சரியான வழியாகும்.

No comments:

Post a Comment